scorecardresearch

மோசடி கும்பலை பிடித்தாரா அருண்விஜய்? தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம்

எனது வாழ்நாள் சேமிப்பை செலவழித்த எடுத்த எனது திரைப்படத்தை ரூ. 30 திருட்டு சிடியில் பார்த்தார்கள்,” என்று தனது படம் தோல்வியடைந்ததால் தனது பணத்தை இழந்த தயாரிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

மோசடி கும்பலை பிடித்தாரா அருண்விஜய்? தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம்

சமீப வருடங்களாக சினிமாத்துறை சந்திக்கும் முக்கிய பிரச்சினை சினிமா பைரசி. ஒரு படம் வெளியான அடுத்த சில மணி நேரங்களில் அந்த படத்தை ஆன்லைனில் வெளியிட்டு படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சினிமா பைரசி சம்பவங்கள் பெரும்பாலும் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளம் தான் செய்வதாக பேசப்படுகிறது.

இந்த பிரச்சினையையும் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தையும் மையமாக வைத்து வெளியாகியுள்ள வெப் சீரிஸ் தான் தமிழ் ராக்கர்ஸ். இதன் மூலம் இயக்குநர் அறிவழகன், நடிகர் அருண்விஜய் இருவரும் வெப் சிரீஸில் அறிமுகமாகின்றனர்.

பிரபல பைரசி இணையதளம் தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறது. இதனிடையே பெரிய பட்ஜெட்டில் தயாரான ஒரு படத்தை வெளியாகவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளருக்கு தகவல் வருகிறது. இதனால் பதறிப்போன அவர் போலீசில் புகார் அளிக்கிறார்.

இந்த வழக்கை விசாரிகக் நியமிக்கப்படும் காவல்துறை அதிகாரி அருண்விஜய் அந்த சினிமா பைரசி கும்பலை பிடித்தாரா? இணையதளத்தில் படம் வெளியாவதை தடுத்தாரா என்பதை சொல்வது தான் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸ். மேலும் தமிழ் ராக்கர்ஸால் தனது மனைவியை இழந்த அருண் விஜய் அதற்கு பழிவாங்கினாரா என்பதையும் சொல்கிறது தமிழ் ராக்கர்ஸ் வெப்சீரிஸ்

அருண்விஜய் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இந்தத் தொடர், சினிமா பைரசியால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை எடுத்து கூறும வகையில் அமைந்துள்ளது.  மனோஜ் குமார் கலைவாணன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாத் எழுதிய எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ், திருட்டுக்கு பங்களித்தவர்கள் திரையுலக முதலாளிகளால் அநீதி இழைக்கப்பட்டவர்களின் பின்னணியை எடுத்து கூறுகிறது.

ஒரிஜினல் ஒன்றை எழுதும் இயக்குநருக்கு கை கொடுக்காதது, ஒரு தயாரிப்பாளரின் கார் டிரைவர், தனது மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் தேவைப்படும்போது தனது முதலாளியிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காதது, பணம் தேவைப்படும் அல்லது தொழிலில் உள்ள சக ஊழியர்களால் வஞ்சிக்கப்பட்டதாக உணரும் எவரும் ‘தமிழ் ராக்கர்ஸ்தான் என்பதை படம் எடுத்துரைக்கிறது.

இவ்வாறு சினிமாத்துறையில் நடக்கும் நிகழ்வுகளை காட்டியது பாராட்டுக்குரியது. அனைத்து வகையான பிரச்சனைகளையும் வளர்க்கும் தொழில்துறையின் தார்மீக மற்றும் நெறிமுறை தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. யோசனை நன்றாக இருந்தாலும் அதை சுவாரஸ்யமாக தருவதில், படக்குழு சற்று தடுமாறியுள்ளது.

அதேபோல் மோசடி கும்பலை பற்றிய படத்தில் மோசடியை நடத்துபவர்களின் உள் செயல்பாடுகளையும் தொழில்நுட்பத்தைப் அவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது குறித்து எவ்வித தகவலும் இல்லை. டிவிடி பிளேயர்கள் வீட்டு பொழுதுபோக்கின் முதன்மை பகுதியாக மாறியதிலிருந்து சினிமா பைரசி புழக்கத்தில் உள்ளது. இப்போது, ​​நாம் டிஜிட்டல் யுகத்தில் இருக்கிறோம், இங்கு திரைப்படங்களின் எச்டி தரம் திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில் ஆன்லைனில் கசிந்துவிடுகிறது. ஆனால் இதெல்லாமல் எப்படி நடக்கிறது என்பதை விவரிக்க படக்குழு மெனக்கிடவில்லை.

இயக்குனர் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் போலீஸ் காவலில் கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவர்கள் குழு, மனநோயாளிகளாக மாறுகிறார்கள். அதில் அவர்கள் தொடர் கொலைககள் செய்வார்கள். இதில் தொடர் கொலைகளுக்குப் பதிலாக, புதிய திரைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் வேட்டையாடு விளையாடு சான்ஸில் கமல்ஹாசன் மற்றும் கமலினி முகர்ஜியின் கதாபாத்திரங்களின் மறுபதிப்புகளாக தமிழ் ராக்கர்ஸின் பாதையில் இருக்கும் ருத்ராவாக அருண் விஜய்யும், திரைப்பட ஆர்வலரான ருத்ராவின் மனைவி கீர்த்தனாவாக ஐஸ்வர்யா மேனனும் வருகிறார்கள். சந்தியாவாக வாணி போஜன் ஒரு சுதந்திரமான பெண்ணாக இருந்தாலும், ஒரு போலீஸ்காரர் போல இல்லாமல் ஒரு கல்லூரிப் பெண்ணைப் போலவும் தனது சீனியர் மீது சொல்லமுடியாத ஒரு உணர்வுகளுடன் செயல்படுகிறார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil rockerz review arun vijay vaani bhojan in tamil cinema