scorecardresearch

ரோஜா சீரியல் நடிகைக்கு வளைகாப்பு… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷையா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அக்ஷையா பதிவிட்டு வருகிறார்.

ரோஜா சீரியல் நடிகைக்கு வளைகாப்பு… பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

சன்டிவியின் பெரிய ஹிட் சீரியலான ரோஜா சீரியலில் வில்லி அனு கேரக்டரில் நடித்து வரும் விஜே அக்ஷையா கர்ப்பமாக உள்ள நிலையில், அவருக்கு வளைகாப்பு விழா நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

சன்.டி.வி.யின் பிரபலமான சீரியல்களில் முக்கியமானது ரோஜா. சிப்பு சூரியன், பிரியங்க நல்காரி, வடிவுக்கரசி, ராஜேஷ் விஜே அக்ஷையா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகம்.

அந்த வகையில் தனக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் விஜே அக்ஷையா. சன்.டி.வியின் வணக்கம் தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமான இவர், அதனைத் தொடர்ந்து சன்டிவியின் ரோஜா சீரியலில் அனு என்ற முக்கிய நெகடீவ் கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார்.

அனு கேரக்டரை பலரும் திட்டி வருவதே இவருக்கு கிடைக்கும் முக்கிய பாராட்டாகும். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அக்ஷையா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் அக்ஷையா பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில், விநாயகர் சதூர்த்தி வாழ்த்துக்களை சொல்லும் விதமாக சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இதில் தனது 2-வது திருமண நாளை கொண்டாடும் அக்ஷையா தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்தார். இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று ஆச்சரியத்துடன் கேட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இதனிடையே தற்போது அக்ஷையாவுக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அக்ஷையா, மகிழ்ச்சியுடன் வளைகாப்பு என்று பதிவிட்டுள்ளார். இதற்கு விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் நாயகி நட்சத்திர நாகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil roja serial actress vj akshyaa babysitter photos viral