New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Giri.jpg)
VJ Grirja Marriage : சமையல் மந்திரம் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற தொகுதிப்பாளினி கிரிஜாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் மந்திரம் என்ற அந்தரங்க நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றவர் கிரிஜா. சென்னையை சேர்ந்த இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், இளைஞர்கள் கேட்கும் அந்தரங்க கேள்விகளுக்கு டாக்டருடன் இணைந்து முகம் சுளிக்காமல் பதில் சொல்லி வருவார். மேலும் இளைஞர்களின் கேள்விகளை வைத்தே அவர்களை கலாய்ப்பது இவரது பிளஸ்.
சிறு வயதில் தோல் சம்பந்தமான படிப்பு படிக்கணும்னு என்ற இவரது ஆசை நிறைவேறாமல் போக, டிவி ஸ்க்ராலிங்கில் ஆடிஷன் அட்டண்ட் செய்து பின்னர் தான் சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார். அதன் பின்னர் மும்பைக்கு தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் இர் பணியாற்றியபோதே, பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால், கிளாமர் ரோல் என்பதால் அதனை தவிர்த்துவிட்டதாகும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அதிக மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிரிஜாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருக்கு இளைஞர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.