Tamil selvi promo : சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தமிழ் செல்வி சோகமான எபிசோட்டாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
Advertisment
Tamil selvi serial : சரவணனை திருமணம் செய்யவிருந்த தமிழ்செல்வியை அமுதன் கல்யாணம் செய்ய மொத்த சீரியலும் மாறிவிட்டது. அப்பாவி தமிழ்செல்வி இந்த குடும்பத்தில் மாட்டிக் கொண்டு தினம் தினம் அழுது கொண்டிருக்கிறார்.
அமுதனாவது தமிழ்செல்விக்கு ஆறுதலாக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில் இன்று அமுதனும் குடும்பத்துடன் சேர்ந்து தமிழ் செல்வியை திட்டி தீர்ப்பது பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கிறது. மொத்த குடும்பத்திற்காக ஆசை ஆசையாக சமைத்த தமிழ் செல்வி அதை அக்கறையுடன் எல்லாருக்கும் பரிமாறுகிறார்.
Advertisment
Advertisements
சாப்பாட்டை வாயில் அனைத்த அனைவரும் காரம், உப்பு என கீழே துப்புகின்றனர். கேவலமாக சமைத்து இருப்பதாக ஒட்டு மொத்த குடும்பமும் தமிழ்செல்வியை வசைப்பாடுகிறது. பாட்டியை தவிர.
Lakshmi Stores promo:
தனது காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருப்பதை எண்ணி தினம் தினம் அழுகிறார் நட்சத்திரா. காதலியின் அழுகையை கண்டு அவளை சமாதானம் செய்கிறார் க்ரிஷ். அப்போது தான் யதார்த்தமாக மாடிக்கு வரும் மகா லட்சுமி அவர்களை பேசிக் கொண்டிருப்பதை கேட்கிறார்.
உங்கள் திருமணத்தில் யாருக்கும் விருப்பமில்லை என்றும், உங்களின் திருமணம் நடக்காது என கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியடைகிறார்கள். அதுமட்டுமில்லை க்ரிஷை திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் மாமா நட்சத்திராவை அழைத்து மிரட்டல் விடுகிறார். நீங்கள் இருவரும் பிரிந்தால் தான் என் மருமகள் சந்தோஷமாக இருப்பாள் என்றும் ஆக்ரோஷமாக பேசுகிறார்.