scorecardresearch

தாலாட்டு சீரியலுக்கு மாறிய ஜீ தமிழ் சீரியல் வில்லி… அப்போ செம்பருத்தி அவ்வளவுதானா?

Tamil Serial Update : தாலாட்டு சீரியலில் நடிக்க உள்ளதால், மௌனிகா செம்பருத்தியில் இருந்து விலகிவிட்டாரா என்ற ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

தாலாட்டு சீரியலுக்கு மாறிய ஜீ தமிழ் சீரியல் வில்லி… அப்போ செம்பருத்தி அவ்வளவுதானா?

Tamil Serial Actress Mounica Leave In Sembaruthi Serial : சின்னத்திரையில் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் இருந்து சமீப மாதங்களாக முன்னணி நட்சத்திரங்கள் பலர் விலகி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் இந்த சீசனை நட்சத்திரங்கள் விலகும் சீசன என்று கூறி வருகின்றனர். நடிகர் நடிகைகள் விலகல் இந்த சீரியலுக்கே பெரும் சறுக்கலை ஏற்படுத்தும் நிலையில், உள்ளது. இந்த சறுக்கலை தற்போது ஜீதமிழ் சீரியல் சந்தித்துள்ளது.

ஜீ தமிழில் கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமான ஓடி வரும் சீரியல் செம்பருத்தி.  டிஆர்பி ரேட்ங்டிகில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில், ஆதி – பார்வதி ரொமான்ஸ் கட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் தமிழ சினிமாவின் முன்னணி நடிகையான இருந்த ப்ரியா ராமன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

காதல் கதையம்சம் கொண்ட இந்த சீரியலில் குடும்பத்திற்குள் நடக்கும் போட்டி பொறாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையப்படுத்தி திரைக்கதை அமைச்சப்பட்டுள்ளது. முதலில் இந்த சீரியலில் ஆதியாக நடித்து வந்த நடிகர் கார்த்திக் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக விஜே அக்னி ஆதியாக நடித்து வருகிறார். பார்வதியாக ஷாபனா நடித்து வரும் நிலையில், வில்லி நந்தினியாக மௌனிகா நடித்து வருகிறார்.

ஆனால் தற்போது இந்த சீரியலில் இருந்து மெளனிகா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் சன்டிவி மற்றும் ஜீ தமிழ் என மாறி மாறி சீரியல்களில நடித்து பிரபலமாக மௌனிகா தற்போது செம்பருத்தி சீரியலில் இந்து விலகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இவர் சன்டிவியின் பிரபலமான தொடரான தாலாட்டு சீரியலில், நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கிருஷ்ணா ஸ்ருதி ராஜ் ஆகியோர் முதன்மை கேரக்ரில் நடித்து வரும் தாலாட்டு சீரியல் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. தொடக்கத்தில் சுமாரான வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் தாரா என்ற வில்லி ரோலில் நடித்து வந்த விஜே மலர், தற்போது சீரியலை விட்டு விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக அடுத்து யார் தாரா கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது.

தற்போது இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செம்பருத்தி சீரியலில் இருந்த நடிகை மௌனிகா தற்போது இந்த தாரா ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தாலாட்டு சீரியலில் நடிக்க உள்ளதால், மௌனிகா செம்பருத்தியில் இருந்து விலகிவிட்டாரா என்ற ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், இது குறித்து மௌனிகா தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil sembaruthi serial actress mounica leava that serial update intamil