scorecardresearch

உங்கள் அழகில் எந்த மாற்றமும் இல்லை… சுஜிதா தனுஷ் வைரல் போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வருகிறார். சுஜிதா ’கதைகேளு கதைகேளு’ எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார்.

உங்கள் அழகில் எந்த மாற்றமும் இல்லை… சுஜிதா தனுஷ் வைரல் போட்டோஸ்

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து’ தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர் சுஜிதா தனுஷ்.

சின்னத்திரையில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் சுஜிதா, தென்னிந்திய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக’ தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

வாழ்க்கையில் ஒரு கட்டத்தில்’ சீரியலா அல்லது சினிமாவா என்ற ஒரு நிலை வந்தபோது  சுஜிதா சீரியலைத் தேர்ந்தெடுத்தார். பல முன்னணி சீரியல்களில் நடித்துள்ளார்.

இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடித்து வருகிறார். சுஜிதா ’கதைகேளு கதைகேளு’ எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார்.

மேலும் தமிழ் தெலுங்கு, மலையளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்துள்ளார். பல மொழி படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டுசென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். 

இதே சீரியலின் தெலுங்கு ரீமேக்கிலும் இவரே நடித்திருந்தார். நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வரும் சுஜிதா, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இதில் சுஜிதா அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவரை சேலையிலேயே பார்த்து பழகிய ரசிகர்களுக்கு தற்போது இவர் மாடர்ன் உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil seria actress pandian stores sujitha dhanush photo gallery