/tamil-ie/media/media_files/uploads/2022/07/Abi-Taylar.jpg)
Tamil Serial Abi Tailor Serial Time Slot Change : சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கை கருத்தில் கொண்டு கலர்ஸ தமிழ் சேனலின் அபி டெய்லர் தொடர் ஒளிபரப்பும் நேரம் மாற்றபட்டுள்ளது.
முன்னணி சேனல்களுக்கு இணையாக சீரியல்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் அபி டெய்லர். வித்தியாசமாக கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கர்களின் மனதை கவர்ந்து வருவதோடு மட்டுமல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பெற்று வருகிறது.
அபிராமி, ஆனந்தி, மற்றும் அரவிந்த் ஆகியோரின் தந்தையான சுந்தரமூர்த்தி மூத்த மகள் அபிராமி சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் குடிகாரன்.ஒரு தொழில்முறை தையல்காரரான அபிராமி,‘அபி டெய்லர்’ என்ற பெயரில் சிறு தொழில் நடத்தி வருகிறார்.
ஒரு கட்டத்தில் அபிராமி தொழில் அதிபர் அசோக் இருவரும் சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது கதையின் முக்கிய மையமாக அமைகிறது. மேலும் வரும் எபிசோடுகளில் அபி டெய்லர் சீரியலில் பெரிய முக்கிய திருப்பம் அரங்கேற உள்ளதாகவும், சமீபத்தில் வெளியான இந்த சீரியலின் ப்ரமோவில் முக்கிய 3 கேரக்டரர்கள் என்ட்ரி ஆக உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால் அபி டெய்லர் மீதான் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த சீரியலில் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அபி டெய்லர் சீரியல் வரும் நாட்களில் 6.30 மணிக்கு ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. சமீபத்தில், கலர்ஸ் தமிழல் புதிதாக என்டரி ஆன 'பச்சக்கிளி' என்ற சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா முரளிதரன் (அபிராமியாக), மதன் பாண்டியன் (அசோக்காக), நகைச்சுவை நடிகர் படவா கோபி (சுந்தரமூர்த்தியாக), ஜெயஸ்ரீ (ஆனந்தியாக), ரேஷ்மா பசுபுலேடி, சோனா ஹைடன் மற்றும் பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.