Advertisment

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா? விளக்கம் கொடுத்த நடிகர் அகிலன்

Serial News In Tamil : பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியது குறித்து நடிகர் அகிலன் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலக இதுதான் காரணமா? விளக்கம் கொடுத்த நடிகர் அகிலன்

Bharathi Kannamma Serial Actor Akilan : சின்னத்திரயில் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடம் பிடித்து வரும சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தனித்தனியாக ரசிகர்கள பட்டாளம் உள்ளது. மேலும் பாரதி கண்ணம்மா கதாப்பாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பை போல இந்த சீரியலில் நடித்து வரும் அகில் அஞ்சலி கதாப்பாத்திரத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Advertisment

இந்நிலையல், இந்த சீரியலில் அகிலன் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த அகிலன் திடீரென சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அகில் அஞ்கலி ஜோடியின ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமான அமைந்துள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் அஞ்சலி - அகில் ஜோடியை மிஸ் செய்வோம் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.



இந்நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்துள்ள அகிலன், சினிமாவுக்குள் வர வேண்டும் எண்று தான் நான் நடிப்பையே தேர்வு செய்தேன். தற்போது விஷால் 31 படத்தில் நடித்து வருகிறேன். பிரபுதேவாவின் பகீரா படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். அடுத்து பீசா 3 படத்தில் நடித்து வருகிறன்

அடுத்து ஒரு படத்தில் ஹீரோகவாவும் ஒரு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். இப்படி பல படங்களில் நடிப்பதால் பாரதி கண்ணம்மா ஷூட்டிங்கிற்கு டேட் கொடுக்க முடியவில்லை, அதனால் தான் வெளியேறினேன்" பாரதி கண்ணம்மா எனக்கு ஒரு நல்ல பாதையை வகுத்து கொடுத்தது. அதை நான் சரியாக பயன்படுத்திக்கொண்டேன் என கூறியுள்ளார்.  

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment