இதுல ஃபஸ்ட் ஷிவாங்கி… அதுல பெஸ்ட் கண்ணம்மா: சின்னத்திரை ஸ்டார்ஸ் ரேங்கிங் பட்டியல்

Tamil Serial Rating : சின்னத்திரையில் மக்களை கவர்ந்த நட்சத்திரம் யார் என்பது குறித்து அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

Tamil Serial Actress Update : தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு நிகராக சின்னத்திரை நடிகர் நடிகைகள் பிரபலமாகி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்குகே ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் என்று சொல்லாம். இதற்கு முக்கிய காரணம் சீரியல்கள். சீரியல்களில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருவதால், சீரியல் நடிகர் நடிகைகள் நாள்தோறும் மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

அதுமட்டுமல்லாமல், வாரத்தின் 7 நாட்களிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் முன்னணி தொலைக்காட்களில் ஒளிபரபபாகும் சீரியல்களுக்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் வெள்ளித்திரை நடிகர் நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளது. தொடக்கத்தில் வெள்ளித்தரையில் வாய்ப்பு கிடைக்காத நட்சத்திரங்களே சின்னத்திரையில் என்டரி கொடுத்து வந்தனர்.

ஆனால் தற்போது வெள்ளித்திரைக்கே சின்னத்தரையில் இருந்து நடிகர் நடிகைகள் சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் முன்னணி நடிகர்களான கமல், அர்ஜூன், விஜய் சேதுபதி, கரு பழனியப்பன், பிரியாராமன், சுஹாசினி உள்ளிட்ட பலரும் சின்னத்திரையில் தங்களது தடத்தை பதித்து வருகின்றனர். அதேபோல், சந்தானம், சிவகார்த்திகேயன், அஸ்வின், புகழ், சிவாங்கி,  உள்ளிட்ட பலரும் வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதன் மூலம் சின்னத்திரை வெள்ளித்திரை என ரசிகர்கள் வித்தியாசம் பார்க்காமல் ஆதரவு அளித்து வருகின்றர். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் மிகுந்த ஆளுமை கொண்ட சின்னத்தரை நட்சத்திரங்கள் பட்டிலை ஆர்மேக்ஸ் மீடியா என்ற பகுப்பாய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சின்னத்திரையில் மக்களை கவர்ந்த நட்சத்திரம் யார் என்பது குறித்து அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த பட்டியலில் விஜய் டிவியின் டாப் தொடரான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் முதலிடத்தை பிடித்துள்ளது. ரோஷ்னி ஹரிப்பிரியன் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கு முதலிடம் கிடைத்தாலும், தற்போது அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வினுஷா தேவி தற்போது கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளவர் ரோஜா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில், பிரியங்கா நல்காரி ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கணவர் அர்ஜூன் உடனான இவரின் காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்

இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தையும் ரோஜா சீரியவே ஆக்கிரமித்துள்ளது. இந்த தொடரில் ரோஜாவின் கணவராக வரும் அர்ஜூன் 3-வது இடத்தை பிடித்துள்ளார். கர்நாடகாவை சேர்ந்த சுப்பு சூரியன் அர்ஜூனாக நடித்து வருகிறார். இந்த சரியல் தற்போது ஆயிரம் எபிஸோடுகளை நெருங்கி வருகிறது.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது பாக்யலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி 2020 ஜூலை தொடங்கியது. தொடக்கத்தில் வரவேற்பை பெறாத இந்த சீரியல் தற்போது  மக்களிடையே இந்த தொடர் பிரபலமாகியுள்ளது. இதில் பாக்கியலட்சுமி கதாப்பாத்திரத்தில் சுஜித்ரா நடித்து வருகிறார்.

இறுதியாக ஐந்தாவது இடத்தை சுந்தரி சீரியல் பெற்றுள்ளது. இதில் சுந்தரியாக கேப்ரியெல்லா நடித்து வருகிறார். படிப்பதற்கு துடிக்கும் ஒரு கிராமத்து பெண்னின் கதையாக உள்ள இந்த தொடர் 2021 ஜனவரி முதலே இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சின்னத்திரை ஆளுமைகள்:

மக்களை கவர்ந்த சின்னத்திரை ஆளுமைகள் பட்டியலில் பாடகி சிவாங்கி முதலிடத்தில் உள்ளார். சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி குக் வித் கோமாளி மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த பட்டியலில் குக் வித் கோமாளி  புகழ் இரண்டாம் இடம் பிடித்தள்ளார். சூப்பர் சிங்கர் மாகாபா ஆனந்த் 3-வது இடத்திலும், பிக் பாஸ் பிரியங்கா 4-வத இடத்திலும், நீயா நானா கோபிநாத் 5-வது இடத்திலும் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actor and actress rating update in tamil

Next Story
திமுக எம்.பி சகோதரர் நடிகர் மனோகர் மரணம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express