Advertisment

சன் டி.வி சீரியல் காதல் ஜோடி திடீர் திருமணம்... வைரல் புகைப்படங்கள் : குவியும் வாழ்த்துக்கள்

சன் டி.வி சீரியல்களில் நடித்து வந்த நடிகர் அரவிஷ் - ஹரிகா இருவரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Aravish And Harika

அரவிஷ் - ஹரிகா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சுந்திரி சீரியலில் கிருஷ்ணா கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் நடிரக ஹரிகாவை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலின் முதல் சீசன் முடிந்து தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதனிடையே கடந்த சில வருடங்களாக சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நடிகர் நடிகைள் திருமணம் செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது.

அதே சமயம் ஒரு சீரியல் நடிகர் மற்றொரு சீரியலில் நடிக்கும் நடிகையை திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வை நடிகர் அரவிஷ் தொடங்கி வைத்துள்ளார். சுந்தரி சீரியலில் கிருஷ்ணா என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர், திருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வந்த நடிகை ஹரிகாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் காதலிப்பதாக இணையத்தில் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இவர்களுக்கு தற்போது இரு வீ்ட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள் அதிகம் பங்கேற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை அரவிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹரிகா – அரவிஷ் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், சக சின்னத்திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் ஆர்யன் ஜீ தமிழின் செம்பருத்த சீரியலில் நடித்து வந்த ஷபானாவை திருமணம் செய்துகொண்ட நிலையில், அந்த வரிசையில் தற்போது அரவிஷ் –ஹரிகா ஜோடி இணைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sundari Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment