Tamil Serial Actor Arnav Arrest For His Wife Complaint காதல் மனைவி புகார்: சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது | Indian Express Tamil

காதல் மனைவி புகார்: சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது

மகராசி சீரியலில் நடித்து வரும் அவர், விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அர்ணவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

காதல் மனைவி புகார்: சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது

சின்னத்திரை நடிகை திவ்யா தனது காதல் கணவர் அர்ணவ் மீது அளித்துள்ள புகார் கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தற்போது நடிகர் அர்ணவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்னத்திரையின் செவ்வந்தி சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா. அதனைத் தொடர்ந்து தற்போது மகராசி சீரியலில் நடித்து வரும் அவர், விஜய் டிவியின் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகர் அர்ணவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

அதன்பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் சேர்ந்து வாழந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நடிகை திவ்யா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்தார்.

மேலும் தனது கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம், என்று கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா தனது கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து 2 வீடியோ பதிவுகளை வெளியிட்டார். இந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ணவ் திவ்யா மீது புகார் அளித்தார்.

இந்நிலையில், திவ்யா அளித்த புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த நேற்று முன்தினம் (அக் 12) சென்னை போரூர் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அர்ணவ்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிலையில், அவர் ஆஜராகவில்லை என்றால் கைதாகும் நிலை வரும் என்று கூறப்பட்டது.

இதனிடையே அர்ணவ் இன்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor arnav arrest for his wife complaint