சன்டிவி டூ விஜய் டிவி… கம்பேக் கொடுத்த பிரபல சீரியல் நடிகர்

Tamil Serial Update : விஜய் டிவியின் ஹிட் சீரியலான நம்ம வீட்டு பொண்ணு தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்

சன்டிவி டூ விஜய் டிவி… கம்பேக் கொடுத்த பிரபல சீரியல் நடிகர்

Tamil Serial Actor Arun In Vijay TV Serial : தமிழ் சின்னத்திரையில் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை பயன்படுத்திக்கொள்ளும் சன்டிவி அவ்வப்போது புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறது. அந்த வகையில். கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது பூவே உனக்காக.

முக்கோண காதல் கதையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியலில் ராதிகா ப்ரீத்தி, அருண், ஜோவிதா லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியலில் இருந்து திடீரென நடிகர் அருண் விலகுவதாக அறிவித்தார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தொடர்ந்து ராதிகா ப்ரீத்தி, ஜோவிதா ஆகியோரும் அடுத்தடுத்து விலகினார். தற்போது நடிகர் அசீம், வைஷாலி அக்சரா ஆகியோர் நடித்து வருகின்றனர். இதில் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன். விரைவில் அடுத்த ப்ராஜக்டில் சந்திப்போம் என்று அருண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெப் சிரீஸில் நடித்து வரும் அருண் தற்போது விஜய் டிவிக்கு எண்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியின் ஹிட் சீரியலான நம்ம வீட்டு பொண்ணு தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor arun entry in vijaytv namma vettu ponnu serial

Exit mobile version