நடுத்தர குடும்பம்… நழுவிய வெள்ளித்திரை வாய்ப்பு… சின்னத்திரையில் சாதித்த அருண்பிரசாத்

Tamil Serial Update : அருண் பிரசாத். இளைஞர்கள் மட்டுமல்லாது இளம் பெண்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் நாயகனாக வலம் வருகிறார்

Bharathi kannamma Serial actor Arun prasad Life Story : சின்னத்திரையில் ரசிகர்கள் மட்டுமல்லாது பலரையும் கவர்ந்து வருவது சீரியல்கள். தினசரி எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருவதால் ரசிகர்கள் பலரும் சீரியல் ஒளிபரப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சீரியல் பெரிய பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானதாக உள்ளது.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் பரபரப்பாக போய்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தும் அளவுக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் முதன்மை கதாப்பாத்திரமான பாரதி ரோலில் நடித்து வருபவர் அருண் பிரசாத். இளைஞர்கள் மட்டுமல்லாது இளம் பெண்களின் உள்ளம் கவர்ந்த சீரியல் நாயகனாக வலம் வரும் இவர் பாரதி கணணம்மா சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்ளை எண்ணிக்கையை உயர்த்தி வருகிறார்.

இவரது கதாப்பாத்திரம் வில்லத்தனம் கலந்தது தான் என்றாலுமே இவரது நடிப்பை பலரும் விரும்பி பார்க்கின்றனர். அதிலும் தனது நிலையை சொல்லி அம்மாவிடம் வருத்தப்படும் சீன்களில் அருண்பிரசாத் பலரின் மனதை வென்றுள்ளார் என்றே கூறலாம் அந்த அளவிற்கு பெயர் பெற்றுள்ள அருண்பிரசாத், கடினமான உழைப்புக்கு பிறகே இந்த நிலையை எட்டியுள்ளார். அதிலும் முதல் சீரியலிலே கைதேர்ந்த நடிகரான தன்னை உயர்த்திக்கொண்டு ரசிகர்ளை கட்டிப்போட்டுள்ளார்

வைப் நடிப்பில் வெளியான மேயாத மான் படத்தில் நாயகனின் நண்பபராக நடித்த இவரை, பாரதி கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்துள்ளார் விஜய் டிவி இயக்குனர் பிரவீன், முதலில் சீரியல் என்று தயக்கம் காட்டிய அருண், அதன்பிறகு துணிந்து களத்தில் இறங்கியுள்ளார். அவரின் துணிச்சலுக்கு தற்போது பெரிய பெயர் கிடைத்துள்ளது.

சேலத்தில் பிறந்து வளர்ந்த அருண்பிரசாத், சென்னை கிறித்தவ கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். படிக்கும்போதே நண்பர்களுடன் இணைந்து பல குறும்படங்களில் நடித்துள்ளார். ஆனாலும் வெள்ளித்திரையில் வாய்ப்பு தேடிய இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனால் கலங்காத அருண் விடாமல் தனது முயற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்த முயற்சியின் பலனாக மேயாத மான் படத்தில் நாயகனின் நண்பராக நடித்த இவருக்கு,  அடுத்து ஜடா படத்தில் நடிகர் கதிரின் நண்பராக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

படங்களில் நடித்தாலும், பிரபலமாகாத அருண் தற்போது சீரியல் மூலம் தன்னை ரசிகர்கள் மத்தியில் தன்னை நிரூபித்துள்ளார். முயற்சி மட்டுமே கைக்கொடுக்கும் என நம்பிய அருண் பிரசாத் இன்று பலருக்கும் வியப்பை கொடுக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். ஆனாலும் தனது வெள்ளித்திரை கனவுககாக மீண்டும முயற்சி பாதையில் இறங்கியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actor arun prasad lifestory update in tamil

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com