scorecardresearch

அவரைப் பார்த்தா வெளுக்கத் தோணும்’: பயில்வான் மீது பாயும் இன்னொரு டி.வி பிரபலம்

ஒருவரை துன்புறுத்தி அதன்மூலம் கிடைக்கிற பணத்தை அவருடைய குடும்பம் சாப்பிடுவது என்றால் அது ஜீரணம் ஆகாது.

அவரைப் பார்த்தா வெளுக்கத் தோணும்’: பயில்வான் மீது பாயும் இன்னொரு டி.வி பிரபலம்

திரைத்துறை குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும் பயில்வான் ரங்கநாதனை பார்த்தான் அறையவேண்டும் என்று தோன்றும் என பிரபல சீரியல் நடிகர் அருண்குமார் ராஜன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை சீரியல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அருண்குமார் ராஜன். கடந்த 2010-ம் ஆண்டு சன்.டி.வி.யின் இளவசரி தொடரில் அறிமுகமான இவர், தொடர்ந்து அழகி, வாணிராணி, சந்திரலேகா, கல்யாண பரிசு, பிரியசகி, சந்திரகுமாரி, பூவே உனக்காக உள்ளிட்ட தொடர்களில் நடித்து முன்னணி சின்னத்திரை நடிகரா வலம் வருகிறார்

சன்.டி.வி.யில் இவர் நடித்த பூவே உனக்காக சீரியல் சமீபத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென முடித்துககொள்ளப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே சமயம் அருண்குமார் ராஜன், அடுத்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் கண்டநாள் முதல் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சுமார் 12 வருடங்களாக சின்னத்திரையில் பயணித்து வரும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் முக்கிய நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துகொண்டார். இதில் பயில்வான் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டது ரொம்ப கேவலமான செயல் என்று கூறியுள்ளார்.

மேலும் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு கசப்பான சம்பவம் நிகழ்ந்திருக்கும். அவர்கள் அவங்களோட சூழல் அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவர்களின் பர்சனல் விஷயங்களை பொதுவெளியில் பேசுவது உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது சுதந்திர நாடுதான் பேச்சுரிமை அனைவருக்கும் உண்டு. அதற்கும் மீறி ஒருவரின் பர்சனல் விஷயம் குறித்து பேசுவது சரி என்று ஆகாது.

மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஆயிரம் விஷயங்கள் இருக்கிறது. ஒருத்தரை மதிக்க தெரியவில்லை என்றாலும் ஒதுங்கி சென்றுவிட வேண்டும். வாழ்க்கை ஓட்டத்தில் தப்பான கண்ணோட்டத்தில் பேசி உங்க பொண்ணை யாராவது சுட்டிக் காட்டினால் அதைக் கேட்டுட்டு யாராவது இருப்பீர்களா? எனக்கு ரொம்ப மனசு வலிக்குது. எல்லோரும் அசிங்கத்துக்கு மேல் கல் அடிக்க வேண்டாம் என்கிற மனநிலையில் ஒதுங்கி தான் நானும் போறேன்.

எல்லோருமே ஏதோ ஒரு வகையில் தப்பு பண்ணி இருப்பார்கள். அந்த தப்பை உணர்ந்து அவர்களை சரிசெய்து விடுவார்கள். அதுதான் மனித வாழ்க்கை. ஆனால், இப்படிப் பேசுவது தனிமனிதனை மட்டும் பாதிக்காமல் அந்த குடும்பத்தையே பாதிக்கும். இன்றைக்கு அவர் கூட நடித்த சீனியர் நடிகர்கள் குறிப்பாக கவுண்டமணி சார் பற்றி எல்லாம் பேசுவது எப்படி சரியாக இருக்கும்? இந்த மாதிரி பேசி சம்பாதிக்கிற இருக்கும்? எப்படி சாப்பிடுவது செரிமானம் ஆகிறது? என்று எனக்கு தெரியவில்லை.

இப்படி பேசுவதால் எத்தனை பேருடைய மனசு உடைந்து இருக்கும். அப்படி ஒருவரை துன்புறுத்தி அதன்மூலம் கிடைக்கிற பணத்தை அவருடைய குடும்பம் சாப்பிடுவது என்றால் அது ஜீரணம் ஆகாது. அவரை நேரில் பார்த்தால் நான் கண்டிப்பாக அறைந்து விடுவேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor arunkumar raja say about bayilvan ranganathan