Advertisment

‘ஒரே தலைவலியா இருக்கு; இதுக்கா இவ்வளவு பேசுனீங்க’: கொட்டுக்காளிக்கு சீரியல் நடிகர் விமர்சனம்!

கொட்டுக்காளி படம் குறித்து சீரியல் நடிகர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
soori kottukkali

பெர்லின் திரைப்பட விழாவில், விருது பெற்றிருந்த சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இது குறித்து சீரியல் நடிகர் ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரையில் பல சீரியல்களில் முன்னணி நடிகராக நடித்திருந்தவர் அருண்குமார் ராஜன். 2010-ம் ஆண்டு வெளியான இளவரசி சீரியல் மூலம் அறிமுகமான இவர், அடுத்து, அழகி, வாணி ராணி, சந்திரகுமாரி, பூவே உனக்காக உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கொட்டுக்காளி படம் குறித்து இவர் கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த வீடியோவில், ஒரே தலைவலியாக இருக்கிறது. சத்தியமா சொல்றேன். கொட்டுக்காளி படடோ, ஷாட் பிலிமோ?, டாக்குமெண்ட்ரி பிலிமோ எதுவும் கிடையாது. படத்திற்கு மொத்தமாக ரூ5000 தான் செலவாகியிருக்கும்போல, ரூ4000 சூரிக்கும், ரூ1000 ஆனா பென்னுக்கும் கொடுத்து ஒரே நாளில் படத்தை எடுத்து முடித்திருப்பார்கள் போல.

சிவகார்த்திகேயன் சார் எதற்காக இவ்வளவு பேச்சு பேசுனீங்க, வாழை படம் பார்த்து 2 நாள் அந்த தாக்கம் குறையல ஆனால் கொட்டுக்காளி தலைவலி தான் முடியல என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட சில நிமிடங்களில் வீடியோவை டெலிட் செய்துள்ளார் அருண்குமார் ராஜன்.

விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக மாறிய சூரி அடுத்து கருடன் என்ற பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த நிலையில், அவருக்கான பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதனிடையே தனது 3-வது படமாக சிவகார்த்திகேயனுடன் இணைந்த சூரிக்கு, படம் சர்வதேச விருதுகளை வென்றிருந்தாலும், தற்போது படம் கடுமையாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், கொட்டுக்காளி குறித்து பேசியது தொடர்பான பலரும் விமர்சித்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment