Advertisment
Presenting Partner
Desktop GIF

காதல்... கல்யாண சர்ச்சை... பாக்கியலட்சுமி சீரியலுக்கு பை சொல்லும் பிரபலம்?

Tamil Serial Update : டிஆர்பி ரேட்டிங்கும் முன்னணியில் இருந்து வரும் பாக்யலட்சுமி சீரியலில் நடித்து வரும் பிரபலம் ஒருவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

author-image
WebDesk
New Update
காதல்... கல்யாண சர்ச்சை... பாக்கியலட்சுமி சீரியலுக்கு பை சொல்லும் பிரபலம்?

Vijay TV Baakiyalakshmi Serial Update : விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாக்யலட்சுமி சீரியல் இல்லத்தரசிககள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அழகான குடும்பம் அன்பான குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தின் தலைவன் போகி, உலகம் தெரியாத தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியை திருமணம் செய்ய தயாராகிவிட்டார்.

Advertisment

இதற்காக பொய் சொல்லி பாக்யாவிடம் விவாகரத்துக்கான பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கிவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்த வார ப்மோவில், கோபியின் வீடு தேடி கோர்ட் நோட்டீஸ் வருகிறது. இதை ஜெனி வாங்க உடனடியாக கோபி வந்து அதை வாங்கி சென்றுவிடுகிறார். இனால் அடுத்து என்ன நடக்கும் கோபி பாக்யாவை விவாரத்து செய்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் முன்னணியில் இருந்து வரும் நிலையில், தற்போது பாக்யலட்சுமி சீரியலில பிரபலம் ஒருவர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்யாவின் மூத்த மகன் செழியன் கேரக்டரில், எதை பற்றியும் கவலைப்படாமல், தன் வாழ்க்கையை மட்டுமே பார்க்கும் ஒரு சுயநலமான கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் நெகடீவ் பாராட்டுக்களை பெற்ற நடிகர் ஆர்யன் தற்போது விலகியுள்ளார்.

பாக்யலட்சுமி சீரியலில் சிறிய கேரக்டரில் நடித்து நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு, சினிமாவில் பெரிய வாய்ப்பு தேடலாம் என்ற எண்ணத்தில் அவர் பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. சினிமா இல்லை என்றாலும் வேறு சீரியலில் நாயகனாக நடிக்கவும், ஆர்யன் வாய்ப்பு தேடி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் செழியன் கேரக்டரில் கச்சிதமாக பொருந்திய ஆர்யனுக்கு பதிலாக வேறு யார் நடித்தாலும் விரைவில் ரீச் ஆவது கஷ்டம்தான்.

ஆர்யன் கடந்த ஆண்டு இறுதியில், ஜீ தமிழின் செம்பருத்தி சீரியலில் நடித்து வரும் ஷாபனாவை காதலித்து வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணத்தை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்ளதாத நிலையில், திருமணமாக சில நாட்களிலேயே இவர்கள் பிரிவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இருவரும் சேர்ந்து புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment