விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தவர் ஆர்யன். இந்த சீரியலில் பாக்யா – கோபி தம்பதியின் மூத்த மகன் செழியன் கேரக்டரில் நடித்து வந்த இவர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், திடீரென செம்பருத்த சீரியல் நடிகை ஷபானாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலக பரவியது. திருமணத்திற்கு பின்பும் பாக்யலட்சுமி சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த ஆர்யன் உரு கட்டத்தில் அந்த சீரியலில் இருந்து விலகினார். இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து ஆர்யனுக்கு பதிலாக செழியன் கேரக்டரில் வேறொரு நடிகர் நடித்து வருகிறார்.
இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஆர்யன் அடுத்து ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 3 மகள்களுடன் தனது உணவகத்தை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் மருமகனாக ஆர்யன் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த சீரியல் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதே சமயம் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆர்யன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆர்யன், விரைவில் புதிய அறிவிப்பு என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஆர்யன் புதிய சீரியலில் நடிக்க உள்ளாரா? அல்லது அவருக்கு பட வாய்ப்பு கிடைத்துள்ளதா என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.
அதேபோல் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய தற்போது மீண்டும் விஜய் டிவியில் என்ட்ரி கொடுப்பார் என்றும், விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியான, மிஸ்டர் அன்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல் அவரது காஸ்டியூமும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது போல் உள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“