சன்டிவியின் வானத்தை போல சீரியலில் ராஜபாண்டி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அஸ்வின் கார்த்திக் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று வானத்தை போல அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நாயகனின் தங்கை கணவர் ராஜபாண்டி கேரக்டரில் நடித்து பிரபலமாக உள்ளவர் அஸ்வின் கார்த்திக். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக கல்லூரியில் படிக்கும்போதே சீரியலில் நடிக்க வாய்ப்பு தெடியுள்ளார்.
இதில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமான இவர், அடுத்து பிரியமானவள், குல தெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை, றெக்க கட்டி பறக்குது மனசு, அரண்மனை கிளி உள்ளிட்ட சீரியலிகளில் துணை நடிகராக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது 'வானத்தை போல' சீரியலில் ராஜ பாண்டி என்கிற ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரயிலில் தற்போது குழந்தை தொடர்பான பிரச்சனையினால் ராஜ பாண்டி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இருவரும் மீண்டும் இணைவார்ளகா அல்லது ராஜபாண்டிக்கும் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்குமா? என்று வானத்தைபோல சீரியல் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், ராஜபாண்டி கேரக்டரில் நடித்து வரும் அஸ்வின் கார்த்திக் சத்தமே இல்லாமல் தனது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்துள்ளார்.
மேக்அப் ஆர்ட்டிஸ்ட் காயத்திரி என்பவரை காதலித்து வந்த அஸ்வின் கார்த்திக் தற்போது இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இந்த நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“