சின்னத்திரையில் நெகடீவ் கேரக்டரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் அஸ்வின் கார்த்திக், முதல் நாள் இரவில் விருது வாங்கிய நிலையில், அடுத்த நாள் காலை அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து சீரியல்களில் நடிகராக மாறியவர் அஸ்வின் கார்த்திக். குலதெய்வம், சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த இவர், சமீபத்தில் முடிந்த வானத்தைப்போல சீரியலில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல், ஜீ தமிழின் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வில்லியின் கணவராக பாசிட்டீவ் கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது சன்டிவியின் அன்னம் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அஸ்வின் கார்த்திக் கடந்த ஆண்டு, மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடாபான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது. மேலும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், திருமணம் முடிந்த சில மாதங்களில் காயத்ரி கர்ப்பமாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
இது குறித்து தனது சமூகவலைதளங்களில் அறிவித்த அஸ்வின் கார்த்திக் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக அறிவித்திருந்தார். அவரின் எதிர்பார்ப்பு பூர்த்தியாக வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு அஸ்வின் கார்த்திக் – காயத்ரி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளனர். இது குறித்து அஸ்வின் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்னோட ஆசை பெண் குழந்தை வேணும்னுதான் இருந்தது. என் மனைவியும் என்னை மாதிரியே பொண்ணுக்குத்தான் ஆசைப்பட்டாங்க. எதிர்பார்த்த மாதிரியே மகள் வந்துட்டா. ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இப்ப 'அன்னம்' தொடர் மட்டும்தான் போயிட்டிருக்கு. இந்த சீரியலுக்குமே தொடங்கின சில நாட்களிலேயே மக்கள் கிட்ட இருந்து நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கு. கூடுதல் மகிழ்ச்சியா இந்தாண்டு குடும்ப விருதுகள்ல எனக்கும் விருது கிடைச்சிருக்கு. அதுல என்ன ஹைலைட் பாருங்க, முதல் நாள் இரவு விருது அறிவிக்கிறாங்க, மறுநாள் பாப்பாவும் பொறந்தா யாருக்கு கிடைக்கும் இப்படியொரு அதிர்ஷ்டம்' என்று கூறியுள்ளார்.