/indian-express-tamil/media/media_files/kZUIrsslu4i182oPC2Hn.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்று ஒருபக்கம் எதிர்பார்ப்பு எழுத்திருந்தாலும், மறுப்பக்கம் கடுமையான ட்ரோல்களை சந்தித்து வருவது நெட்டிசன்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. விவாகரத்து பெற்ற இல்லத்தரசி தனது குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்? அதற்காக என்னென்ன செய்கிறார் என்பது தொடர்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், பாக்யலட்சுமி கோபிநாத், ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்யாவின் கேண்டீன் பிஸினஸ், மாமனார் சப்போர்ட் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம், கோபி ராதிகா திருமணம், மகனுக்கு ஆதராவாக ஈஸ்வரி, கோபிக்கு குடைச்சல் கொடுக்கும் ராதிகா, பாக்யாவை வேவு பார்க்கும் கோபி என பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில், அடுத:து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த கதையை தொடர்ந்து வந்தாலே சீரியல் எதிர்பார்ப்பின் உச்சமாக இருந்திருக்கும். ஆனால் நடுவில் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறேன் பார் என்பது போல, எழில் திருமணம் செய்துகொண்ட அமிர்தாவின் முதல் கணவன் இறந்துவிட்டதாக காட்டப்பட்ட நிலையில், தற்போது அவர் உயிருடன் வந்திருப்பதாக கதையை மாற்றி ட்விஸ்ட் கொடுத்துள்ளனர்.
ரசிகர்களுக்கு ட்விஸ்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த சீரியல் குழுவுக்கு இந்த ட்விஸ்ட் பேக்ஃபையர் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அமிர்தாவின் முதல் கணவன் கணேஷ் என்ட்ரி ஆனபோதே இது தேவையில்லாத ஆணி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் சீரியல் குழுவினர் அதனை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியல் ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது.
தனது அப்பா அம்மா, போலீஸ் என பலரை வைத்து அமிர்தா மற்றும் நிலாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கணேஷ் கேட்டபோது அமிர்தா வர முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனாலும், அமிர்தாவை அடைந்தே தீருவேன் என்று முடிவு செய்த கணேஷ், தற்போது கத்தியை காட்டி மிரட்டி அமிர்தா மற்றும் நிலா இருவரையும் கடத்திவிட்டான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்த காட்சியை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்திற்காக அடுத்த வாரம் பாக்யாவை வீட்டில் வச்சி செய்வார்கள் என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.