Advertisment

என்னாச்சு கோபி... கடைசியில் இப்படி இறங்கிட்டீங்களே! : பாக்கியலட்சுமி நடிகர் வைரல் வீடியோ

சமூகவலை தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
Gopi Sathees

பாக்கியலட்சுமி கோபி

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் தற்போது டி.எம்.எஸ்.பாடலுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சதீஷ். அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவரது நடிப்பை பார்த்து ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர் தற்போது தனது 2-வது மனைவி ராதிகாவுடன் மீண்டும் பாக்யா வீட்டில் குடியேறியுள்ள கோபிசெழியன் மற்றும் எழில் தொடர்பான பிரச்சனைகளை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். தனது காமெடி வில்லத்தனத்தின் மூலம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். 

சமூகவலை தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது, டி.எம்.எஸ். பாடிய ஹிட் பாடல்களில் ஒன்றான, ‘’யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க’’ என்ற பாடலை சேர்த்து, தரையை மாப் போட்டு துடைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், என்ன கோபி கடைசியில் இந்த நிலைக்கு வந்துட்டீங்களா? என்றும், கோபி சார் சூப்பர் என்றும் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆனால் கோபி எங்கு இருக்கிறார், எதற்காக இப்படி செய்கிறார் என்பது குறித்து எவ்வித விளக்கமும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment