விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து பிரபலமான நடிகர் சதீஷ் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. திருமணத்திற்கு மீறிய உறவு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பலவற்றை பற்றி எடுத்து கூறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதற்கு முன்பு நண்பர்களாக இருந்த பாக்யாவும் ராதிகாவும் தற்போது எதிரிகளாக மாறிவிட்டனர். அதேபோல் தான் இல்லை என்றால் பாக்யா ஒன்றுமே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த கோபிக்கு பாக்யாவின் முன்னேற்றம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
இதனிடையே ஏற்கனவே ராதிகாவின் ஆபீஸில் கேண்டீன் காண்ட்ராக்ட் எடுக்க சென்ற பாக்யாவிடம் ராதிகா இங்கிலீஷில் கேள்விகள் கேட்டு மிளர வைத்துவிட்டார். ஆனாலும் பிடிகொடுக்காத பாக்யா இப்போதான் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். இதையும் கற்றுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து இங்கிலீஷ் கற்றுக்கொள்ள ஸ்போக்கஸ் இங்கிலீஷ் க்ளாசுக்கு செல்கிறார் பாக்யா. அங்கு பழனிச்சாமி என்ற கேரக்டரில் நடிகர் ரஞ்சித் வருகிறார். இவர்களுக்குள் தொடக்க காட்சியே மோதலில் உருவாகியுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கும் என் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் இவர்கள் இருவரும் தொடர்பான காட்சிகள் தான் அதிகம் வ வாய்ப்புள்ளது.
இதனிடையே பாக்யாவின் கணவர் கோபிநாத் கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ப்ரமோ பாத்துருப்பீங்க. ஹீரோ ரஞ்சித் சார் என்ட்ரி. எங்களுக்கு நீங்கள் காட்டிய அதே அன்பு பாசம் மரியாதை அனைத்தையும் நம்ம புது என்டரி ஹீரோ ரஞ்சித் சாருக்கு நீங்கள் எல்லமே காட்டனும். பாக்கியலட்சுமி
#Baakiyalakshmi -ல் இனி #Gopi க்கு காட்சிகள் குறையும் – Sathish pic.twitter.com/haVJu62fYJ
— Parthiban A (@ParthibanAPN) March 3, 2023
800 எபிசோடு வரப்போகிறது. இதுக்கு மேல நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க போகிறேன். வயசாகிடுச்சி தாத்தா என்று கூறியுள்ளார். நடிகர் சதீஷின் இந்த வீடியோ பதிவு வைராகி வரும் நிலையில், இவர் சீரியலில் இருந்து விலகபோகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/