விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கணேஷ் பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று பாக்யா குடும்பம் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், ஜெனி செழியனிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றுவிட்டார். இந்த பிரச்சனை என்ன ஆகும் என்று யோசிப்பதற்குள், அமிர்தாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு, கணேஷ் போலீசுடன் வந்துவிட்டான். வீட்டிற்கு வந்த போலீஸ் உனக்கு கணேஷூடன் போக விருப்பமாக என்று போலீஸ் கேட்கிறார்.
இதை கேட்ட அமிர்தா கொஞ்சம் தயங்க, நீ தைரியமா சொல்லுமா உனக்கு கணேஷ் கூட போக விருப்பமா இல்லையா என்று கேட்க, எனக்கு விருப்பம் இல்லை என்று அமிர்தா சொல்லிவிடுகிறார். இதை கேட்ட, கணேஷ் என்ன அமிர்தா என்று அருகில் போக, அப்போது எழில் வந்துவிடுகிறான். என் கதையை கேட்டாள் பாவமாக இருக்கிறது. செத்தவன் ஒரு மாதம், அல்லது 6 மாதம் கழித்து வந்துருக்கலாம்.
ஆனா 2 வருஷம் கழிச்சி வந்துருக்க என்று கணேஷிடம் சொல்லும் போலீஸ், இப்போ வந்து என் கூட வா என்று சொன்னால் அந்த பொண்ணு எப்படி வரும்? ஒழுங்க மரியாதைய ஸ்டேஷன் வந்து உனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று எழுதிக்கொடு, இங்கிருந்து முதலில் கிளம்பு என்று போலீஸ் கணேஷை இழுத்துக்கொண்டு செல்கிறார்.
இனிமேல் இவனால பிரச்சனை வந்தா என்னை கூப்பிடு என்று எழிலிடம் போன் நம்பரையும் கொடுத்துவிட்டு போகிறார். அடுத்து தனது நண்பன் சதீஷை அழைத்து பேசும், கோபி, இனிமேல் என்னால் இந்த கம்பெனியை நடத்த முடியாதுடா, அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சது நான் கம்பெனியை இழுத்து மூடப்போகிறேன் என்று சொல்கிறான். என்னோட பெயரோடு, செழியன், எழில் இனியா பேரை சேர்த்து ஆரம்பிச்சேன். இன்னைக்கு இழுத்து மூடுவதை தவிர வேறு வழி இல்லை என்று சொல்கிறான்.
வேலையாட்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிலையில், இருக்கிறேன் என்று சொல்ல, இதை கேட்டு சதீஷ் அதிர்ச்சியடைகிறான். அதன்பிறகு கம்பெனியில் வேலை பார்ப்பவர்களிடம் கம்பெனியை இழுத்து மூடுவதாக சொல்கிறான் கோபி. அதை கேட்டு, ஊழியர்கள் திடீர்னு இப்படி சொன்ன எப்படி, எங்களுக்கு குடும்பம் இருக்கு சம்பள பாக்கி என்ன ஆவது என்று கேட்கின்றனர். ஒரு மாதத்தில் உங்கள் சம்பளம் கொடுக்கிறேன் என்று கோபி சொல்ல, உங்களை எப்படி நம்புறது என்று கேட்கின்றனர்.
இதை கேட்ட சதீஷ், இத்தனை வருஷமா சம்பளம் கொடுக்காம இருந்தானா? கண்டிப்பா கொடுப்பான் அதற்கு நான் கேரண்டி. அப்போது கோபி கலங்கி நிற்க, சதீஷ் அவனை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அத்துடன் எபிசோடு முடிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil