Tamil Serial Actress Babloo Prithviraj News : தமிழ் சினிமாவில குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நாயகன் மற்றும் முன்னணி நடிகராக நடித்தவர் பப்லு ப்ரித்விராஜ். தமிழ் மட்டும்மல்லாது தெலுங்கு கன்னடம் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள 90-களின் பாதியில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். தமிழ் தெலுங்கு என பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர், அதன்பிறகு சீரியலில் நடிக்க தொடங்கினார்.
சன்டிவியின் மர்மதேசம் சீரியல் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ராஜ ராஜேஷ்வரி, வாணி ராணி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். தற்போது சன்டியின் கண்ணான கண்னே சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரித்விராஜ் அவ்வப்போது தனது குடும்பதினருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 30 ஆயிரத்திற்கு அதிகமான ரசிகர்கள் பின்பற்றி வரும் நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவில் நடிகை ஒருவர் தனது தோழிகளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரது பின்னால் பாம்பு போல் ஊர்ந்து சென்று அவரது காலை பிடித்து இழுக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கத்திவிடுகிறார்.
தற்போது இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ப்ரித்விராஜின் செயலை கண்டு கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஒரு பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது என்று உருவரும், என்ன சார் இப்படியெல்லாம் பண்றீங்க என்று மற்றொரு ரசிகரும் பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil