Advertisment

56 வயது நடிகர் பப்லுவுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்?

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பப்லு ப்ரித்விராஜ், மர்மதேசம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்டரி ஆனார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
56 வயது நடிகர் பப்லுவுக்கு 23 வயது பெண்ணுடன் திருமணம்?

சின்னத்திரை நடிகர் பப்லு ப்ரித்விராஜ் 23 வயது பெண்னை 2-வது திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் நாயகனாக உயர்ந்தவர் பப்லு ப்ரித்விராஜ். 1971-ம் ஆண்டு நான்கு சுவர்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொடர்ந்து சிவாஜி, ரஜினி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள பப்லு ப்ரித்விராஜ், மர்மதேசம் என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் என்டரி ஆனார். தொடர்ந்து, வாணி ராணி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்த இவர், தற்போது சன்டிவியின் கண்ணான கண்ணே சீரியலில் நாயகியின் அப்பாவாக நடித்து வருகிறார்.

மேலும் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ள பப்லு ப்ரித்விராஜ் கடந்த 1994-ம் ஆண்டு பீனா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஆஹத் என்ற மகன் உள்ளார். இவர் ஆட்டிசம் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பப்லு ப்ரித்விராஜ் தனது மகனை சிறப்பான முறையில் கவனித்து வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்தாலும் தனது மகனின் தேவைகளை சரியாக செய்து வந்த இவருக்கும் இவரது மனைவிக்கும் நாளடைவில் இதுவே பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையெ கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது 56 வயதாகும் பப்லு ப்ரித்விராஜ் 23 வது பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 25 வயதில் மகன் உள்ள நிலையில் தனது மகனை விட சிறிய பெண் ஒருவரை பப்லு திருமணம் செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியை பிரிந்த பப்லுவுக்கு மலேசியாவை சேர்ந்த பெண்ணுடன் நட்பு ஏற்பட்டதாகவும், பப்லு தனது பிஸினஸை மலேசியாவில் தொடங்க அந்த பெண் பெரிய உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. பப்லுவின் மலேசியா பிஸினசுக்கு அடித்தளம் அமைத்த அந்த பெண்ணையே பப்லு சமீபத்தில் 2-வது திருமணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment