/indian-express-tamil/media/media_files/yRMRhjiakKJHsbz9VCd3.jpg)
நடிகர் பிர்லா போஸ்
கீழ் வீட்டில் நடந்த பார்க்கிங் பிரச்சனை காரணமாக தனது மகனை கடத்தி அடித்துள்ளதாக நடிகர் பிர்லா போஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகராக இருப்பவர் பிர்லா போஸ். சீரியலில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இவர், சமீபகாலமாக சினிமாவில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனிடையே நடிகர் பிர்லா போஸ் மகனை ரவுடி கும்பல் கடத்தி தாக்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர். பிர்லா போஸ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் வீட்டில் வசிக்கும் ஒருவருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட பார்க்கிங் மோதல் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகவும் இதில் தனது மகன் பலத்த காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு கீழ் வீட்டில் தங்கியிருக்கும் குடும்பத்தில் ஒரு பையனுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அவரது நண்பர்கள் அவரை பார்க்க வந்தனர். அதில் ஒரு பையன் என் காரை சேதப்படுத்தினார். இது குறித்து விசாரித்தபோது மோதல் ஏற்பட்டது. அவர்கள் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். இது குறித்து அந்த பையனின் பெற்றோரிடம் பேசியபோது அவர்களும் என்னை திட்டினார்கள். பதிவுக்கு என் மகனும் அவர்களை திட்டினார்.
இந்த பிரச்னை இப்படியே முடிந்துவிட்டது. நாங்கள் அப்போதே இதை மறந்துவிட்டோம். கடந்த வாரம் முழுவதும் வேட்டையன் ஷூட்டிங் இருந்ததால் நான் அதில் கவனம் செலுத்தினேன். இதனால் வீட்டுக்கு வரவில்லை. இதை தெரிந்துகொண்ட அவர்கள் என் மகன் டியூசன் சென்று வரும்போது ஆள்வைத்து கடத்தி தாக்கியுள்ளனர். கீழ் வீட்டு பையனும் அவனது நண்பர்களும் திட்டமிட்டு இதை செய்துள்ளனர். ரத்தம் வராமல் உள்காயம் ஏற்படும் வகையில் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து நான் வீட்டுக்கு வந்து எனது மகனை மருத்துவமனையில் சேர்த்தபோது, டாக்டர்கள் பயிற்சி பெற்றவர்கள் உள்காயம் ஏற்படும் வகையில் அடித்துள்ளதாக தெரிவித்தனர். படிக்கும் வயதில் எதற்காக இந்த பழிவாங்கும் என்ன? அடியாள் வைத்து தாக்கும் அளவுக்கு நமது கலாச்சாரம் மாறிவிட்டதா என்று தெரியவில்லை. அந்த கார் விவகாரத்தில் போலீசில் ஏற்கனவே புகார் அளித்துள்ளேன். இப்போது மகன் தாக்கப்பட்டது குறித்தும் புகார் அளித்துள்ளேளன். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.