ராதிகா ஒரு ஏழரை நாட்டு சனி; அவரை பற்றி பேச வேண்டாம்: பொது நிகழ்ச்சியில் கோபப்பட்ட பப்லு ப்ரித்விராஜ்!

வாணி ராணி சீரியலில், இவரும் நடிகை ராதிகாவும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டபோது, வேண்டாம் இதை பற்றி பேச வேண்டம். இது ஒரு ஏழரை நாட்டு சனி என்று கூறியிருந்தார்.

வாணி ராணி சீரியலில், இவரும் நடிகை ராதிகாவும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டபோது, வேண்டாம் இதை பற்றி பேச வேண்டம். இது ஒரு ஏழரை நாட்டு சனி என்று கூறியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Babloo Prithviraj

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பப்லு ப்ரித்விராஜ்க்கு சில புகைப்படங்களை பதிவிட்டு அதை பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதில் முதல் புகைப்படமாக, வாணி ராணி சீரியலில், இவரும் நடிகை ராதிகாவும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டபோது, வேண்டாம் இதை பற்றி பேச வேண்டம். இது ஒரு ஏழரை நாட்டு சனி என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நெட்நூல் யூடியூப் சேனலில், கொடுத்த பேட்டியில் ராதிகா குறித்து பப்லு ப்ரிவித்விராஜ் கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 1989-ம் ஆண்டு வெளியான பாண்டி நாட்டு தங்கம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பப்லு ப்ரித்திவிராஜ். தொடர்ந்து அவள் வருவாளா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ள இவர், ஒரு கட்டத்தில் சீரியலில் நடிக்க தொடங்கினார். மர்மதேசம் தொடங்கி அன்பே வா வரை பல சீரியல்களில் நடித்துள்ள பப்லு தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான, ஏஸ், இந்தியில் ஜாட் ஆகிய படங்களில் நடித்திருந்த பப்லு, வாணி ராணி சீரியல் குறித்தும், நடிகை ராதிகாவுடன்நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில், அதில், என்னுடைய கேரிகரில் பெஸ்ட் பர்ஃபாம் என்றால் அது அரசி சீரியல் மற்றும் வாணி ராணி சீரியல் தான். நான் வாணி ராணி சீரியலில் நடித்துக் கொண்டு இருந்தபோது, ஏன் ஓவராக நடிக்கிறீர்கள். மேடம் திட்டுகிறார்க, என்று என்னிடம் வந்து சொல்லுவார்கள். இதனால், என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க ஆரம்பித்தேன்.

திட்டு வாங்கி விடுவோமோ என்ற பயம் இருந்ததால், கட்டுப்படுத்திக் கொண்டு சில காட்சிகளில் நடிக்க ஆரம்பித்தேன். என்னை ஃப்ரீயாக விட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக அந்த சீரியலில் நடித்திருப்பேன். சின்ன கேமராவில் இப்படி நடிக்கணும், பெரிய கேமராவில் இப்படி நடிப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால், வாணி ராணி சீரியலில் இப்படி நடித்தால் போதும் என்று நினைத்து நடித்தேன்.

Advertisment
Advertisements

அந்த நிகழ்ச்சியில் நல்ல விஷயத்தை பற்றி பேசுவோம், கெட்ட விஷயத்தை பற்றி பேச வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால், வாணி ராணி சீரியலின் போஸ்டரை பார்த்ததும், நான் கொஞ்சம் எமோஷனல் ஆகி என்னுடைய ஆதங்கத்தை நான் தொட்டி தீர்த்து விட்டேன். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் எவ்வளவு நல்ல விஷயங்கள் பேசினாலும் அது வைரல் ஆகாது. ஏதாவது, தவறாக ஒரு வார்த்தை பேசி இருந்தால் அது வைரலாகிவிடும். எங்கே சென்றாலும் ராதிகா மேடம் பற்றி ஏன் அப்படி பேசுகிறீர்க என்று கேட்கிறார்கள்.

ராதிகாவிடமே பப்லு உங்களைப் பற்றி இப்படி தவறாக பேசிவிட்டாரே என்று கேட்டால், அவர்கள் ஆமாம் நான் அவனை செருப்பால் அடித்தேன், கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவேன் என்று பெருமையாகத்தான் பேசுவார். என்னை அவன் தவறாக பேசிவிட்டானா என்று நினைக்க மாட்டார். அது அவர்களின் சுபாவம். ஆனால், நான் அன்று அப்படி பேசி இருக்கக் கூடாது, உணர்ச்சி வசப்பட்டு அப்படி சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

Radhika Sarathkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: