/tamil-ie/media/media_files/uploads/2022/05/deepak-dinakar.jpg)
Tamil Serial Actor Deepak And Shruthi Meet After A long Time: தமிழில் சன்டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பழைய சீரியல்களுக்கு இன்றளவும் நல்ல வரவேற்பு உள்ளது. இதில் ஒருசில சீரியல்கள் தற்போது ரீ-டெலிகாஸ்ட் ஆகி வருகிறது.
அந்த வகையில் சன் டி.வி.யில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த சீரியல் தென்றல். தீபக் தினகர். ஸ்ருதி ராஜூ முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து. தமிழ் கேரக்டரில் தீபக்கும். துளசி கேரக்டரில் ஸ்ருதி ராஜூம் கச்சிதமாக பொருந்தியிருந்தனர்.

சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருக்கும் தமிழ் துளசி மற்றும் தீபா ஆகிய மூவருக்கும் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த சீரியல் மற்றொரு தொலைக்காட்சியில் ரீ-டெலிகாஸ்ட் ஆகி வருகிறது.

இந்நிலையில், ஸ்ருதிராஜ் தற்போது சன்டிவியின் தாலாட்டு சீரியலிலும், தீபக் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலிலும் நடித்து வரும் நிலையில், பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியு வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த ஜோடியை பற்றி புகழ்ந்து வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.