scorecardresearch

பாக்யாவுக்காக வருத்தப்படும் கோபி… இது ராதிகாவுக்கு தெரியுமா? வைரல் வீடியோ

காயம் எப்போதும் ஆறிவிடும். ஆனால் நான் பாக்யாவை பேசிய வார்த்தை எப்படி ஆறும் என கோபி வீடியோ வெளியிட்டுள்ளார்

Baakiyalakshmi
பாக்கியலட்சுமி சீரியல்

சீரியலில் நடப்பது போன்று நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது குடும்பத்தில் சண்டை வந்தால் வார்த்தையை பார்த்து விடுங்கள் என்று பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி கூறியுள்ளார்.

விஜய் டிவியின் பாக்கியலட்மி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி இப்போது பாக்யா இருக்கும் அதே வீட்டில் ராதிகாவுடன் குடியேறி உள்ளார். இதனால் குடும்பத்தின் தினம் தினம் ஒரு பிரச்சனை வருகிறது.

இந்நிலையில், நேற்றைய எபிசோட்டில், பாக்யா பழனிச்சாமியிடம் சிரித்து சிரித்து பேசுவதாக நினைத்துக்கொண்டு கோபி பாக்யாவை தரக்குறைவாக பேசிவிட்டார். இதனால் அதிர்ச்சியாக எழில் கோபியை மரியாதை இல்லாமல் பேசி சட்டையை பிடிக்க போகிறார். ஆனால் அதற்கு எழிலின் கையை தட்டிவிடும் செழியன் கோபியின் சட்டையை பிடித்து இனிமேல் எங்க அம்மாவை பற்றி பேசினால் மரியாதை கெட்டுவிடும் என்று சொல்கிறார்.

இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சீன் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோபி கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், இந்த காயத்தை பாருங்கள் நேற்று என் பிள்ளைகள் என் சட்டையை பிடித்தபோது இந்த காயம் ஏற்பட்டது.

நேற்று சிகப்பாக இருந்தது. இப்போது கொஞ்சம் பெட்டர். ஆனால் இந்த காயம் எப்போதும் ஆறிவிடும். ஆனால் நான் பாக்யாவை பேசிய வார்த்தை எப்படி ஆறும். அதுபோலத்தால் வீட்டில் பெரிய சண்டை நடக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சண்டையில் வார்த்தையை பார்த்து விடுங்கள். அப்போதூன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor gopi sathisah video about baakiyalakshmi