Tamil Serial Actor Kumaran Lifestyle Update : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் வரும் குடும்பத்தினர் அமைதியின் அடையாளமாக இருக்கும்போது, அதிரடி ஆக்ஷனில் கலக்கி வருபவர் கதிர். நடிகர் குமரன் தங்கராஜன் இந்த கேரக்டரை அற்புதமாக உயிர்கொடுத்து வருகிறார்.
சென்னையில், பிறந்த குமரன் ஒரு நடன கலைஞராக சின்னத்திரையில் நுழைந்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் 1 மற்றும் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், பின்னணி நடன கலைஞராக பங்கேற்ற இவர், தொடர்ந்து மானாட மயிலாட சீசன் 4 மற்றும் சீசன் 5, உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளாக பங்கேற்றார். நடன நிகழ்ச்சியில் அசத்திய இவருக்கு சின்னத்திரையின் சீரியல் வாய்ப்பு கிடைத்து.
அதன்படி, 2017-ம் ஆண்டு விஜய் டிவியின் மாப்பிள்ளை என்ற தொடரில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த சீரியலில் அவரது கேரக்டர் ஒரு சில எபிசோடுகளில் இறந்துவிடுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டது. ஆனாலும் அந்த சீரியலின் கதை இவரை சுற்றியே நடக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாகவே இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் அமைந்தது. 4 சகோதரர்கள் உள்ள வீட்டில் 3-வது நபராக கதிர் என்ற கேரக்டரில் நடித்து வரும் குமரன் பாசம், ரொமான்ஸ், ஆக்ஷன் என பல துறைகளில் கலக்கி வருகிறார். மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு மட்டுமே அதிக சண்டை காட்சிகள் வருகிறது.
மேலும் இந்த சீரியலில் முல்லை கேரக்டருடன் இவரது ரொமான்ஸ் காட்சிகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முல்லை கேரக்டரில் முன்பு விஜே சித்ரா நடித்து வந்தார். தற்போது இந்த கேரக்ரில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார். இந்த ஜோடி பாண்டியன் ஸ்டோர்ஸ் அடையாளம் என்றே சொல்லி வருகின்றனர். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கலாட்டா நட்சத்திர விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த ஜோடிக்கான விருதை விஜே சித்ராவுடன் சேர்ந்து பெற்றார்.
அதன்பிறகு வேறு எந்த சீரியலிலும் நடிக்காத குமரன், ஜோடி பன் அன்லிமிட்டெட் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகவும், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் விருந்தினராகவும் கலந்துகொண்டார். சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமல்லாமல் படங்களிலும் குமரன் நடித்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் படத்தில், முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். அதன்பிறகு இவர் ஒரு சில படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும வெளியாகவில்லை.
சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றாலும், குமரனை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றே சொல்லாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil