எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து ரியல் நேர்காணல் ஒன்றில் தனது மனைவிக்கு காபி போட்டு தரும் வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.மாரிமுத்து. மேலும் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தில் தொடங்கி பல படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இவர், தற்போது சீரியலில் களமிறங்கிய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
கோலங்கள் சீரியல் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் சன்.டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில், ஆதிமுத்து குணசேகரன் என்ற கேரக்டரில் மாரிமுத்து சிறப்பாக நடித்து அனைவரின் கவணத்தையும் ஈர்த்து வருகிறார். மேலும் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இவர், எதிர்நீச்சல் சீரியலில் வில்லன் ரோலில் நடித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் மாரிமுத்து தனது மனைவிக்காக காபி போடும் சேலஞ்ஜில் வெற்றி பெற்றுள்ளார். முதலில் அடுப்பை பற்றவைக்க தெரியாமல், தொகுப்பாளர் சொல்வதை கேட்டு பற்ற வைக்கிறார். அதன்பிறகு காபி போடும் அவர் லைட்டா நடுக்கமாதான் இருக்கு என்று சொல்லிவிட்டு, விருந்தாளியாக வந்த உங்களுக்கு கூட காபி இல்லை. இது என் மனைவிக்காக போட்டது.
அதே போல் என் மனைவிதான் என்பதால் இந்த காபியை நல்லாருக்கா என்று குடித்து பார்த்துவிட்டு கொடுக்க கூடாது. அவரும் எனக்காக குடித்துவிட்ட காபி நல்லா இருக்கு என்று சொல்லமாட்டார். குடித்துவிட்டு உண்மை என்னவோ அதை மட்டும்தான் சொல்வார் என்று சொல்ல நாங்களும் அதற்காகத்தான் வெயிட் பண்றோம் என்று தொகுப்பாளர் சொல்கிறார்.
அந்த காபியை வாங்கிக்கொள்ளும் அவரது மனைவி வாழ்க்கையிலேயே இது எனக்கு மறக்க முடியாத நாள் என்று சொல்லிவிட்டு குடிக்கிறார். நம்பி குடிக்கலாமா என்று கேட்டுவிட்டு குடிக்கும் அவர் காபி நல்லாருக்கு என்று சொல்கிறார். ஆனால் பால் இன்னும் கொஞ்சம் கொதிக்க விட வேண்டும். அப்போது அதை கொடு நான் குடித்து பார்க்கிறேன் என்று மாரிமுத்து குடித்துவிட்டு நல்லா இருக்குமா என்னமா நீ இப்படி சொல்ற என்று கேட்கிறார். அதற்கு அவரது மனைவி நீங்க போட்ட காபி உங்களுக்கு நல்லதான் இருக்கும் என்று சொல்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“