Advertisment
Presenting Partner
Desktop GIF

தெலுங்கில் நாயகனான விஜய் டிவி சீரியல் நடிகர்... நாயகியும் தமிழ் நடிகைதான்

Tamil Serial Update : தற்போது தமிழ் சீரியலில் அறிமுகமான நடிகர் முன்னா மற்றும் நடிகை ஹர்ஷாலா ஹனி ஆகிய இருவரும் தெலுங்கு சீரியலில் முன்னணி நட்சத்திரங்களாக நடிக்க உள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தெலுங்கில் நாயகனான விஜய் டிவி சீரியல் நடிகர்... நாயகியும் தமிழ் நடிகைதான்

Tamil Serial Actor Munna And Actress Harshala Honey Entry In Telugu Serial :சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வரும் இந்த காலகட்டத்தில் மற்ற மொழிகளில் இருந்து தமிழில் பல நடிகைகள் அறிமுகமாகி வருகினறனர். இதில் தமிழ் சீரியலில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நடிகைகள் பலர் உள்ளனர்.

Advertisment

ஆனால் மற்ற மொழி சீரியல்களில் தமிழ் நடிகர்கள் நடிப்பது குறைவுதான். ஆனால் தற்போது தமிழ் சீரியலில் அறிமுகமான நடிகர் முன்னா மற்றும் நடிகை ஹர்ஷாலா ஹனி ஆகிய இருவரும் தெலுங்கு சீரியலில் முன்னணி நட்சத்திரங்களாக நடிக்க உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா பார்வை சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகர் முன்னா. பார்வையற்றவராக இவர் நடித்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில், திடீரென இந்த சீரியல் நிறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வைதேகி காத்திருந்தால் சீரியலில் இருந்து நடிகர் பிரஜின் விலகியதை தொடர்ந்து அவர் ரோலில் நடிக்க முன்னா ஒப்பந்தமானார். ஆனால் இவர் ஒரு சில எபிசோடுகள் நடித்தவுடன் இந்த சீரியலும் திடீரென நிறுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழில் எந்த சீரியலிலும் நடிக்காத முன்னா தற்போது குண்டம்மா கதா என்ற சீரியல் மூலம் தெலுங்கில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

அதே போல் சீரியலில் லீட் ரோலில் நடிக்கவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள நடிகை ஹர்ஷாலா ஹனி இந்த சீரியல் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். தமிழில் இவர் லீட் ரோலில் நடிக்க வேண்டும் ரசிகர்கள் விரும்பம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது இவர் தெலுங்கில் நாயகயாகிவிட்டார்.

ஃபிட்னஸ்தான் முக்கியம் என்று இருக்கும் நாயகன், ஜிம்மில் பல பெண்களுக்கு ஃபிட்னஸ் ட்ரெயினிங் கொடுக்கிறார். மேலும் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் தினசரி எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்று ரொம்ப கவனமுடன் கண்கானிக்கிறார். இதனால் ஜிம்மில் உள்ள பெண்கள் அனைவரும் இவரை வெறுக்கினறனர். மறுபுறம் நாயகி பட்ஜி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் பெறுகிறார்.

இந்த போட்டியின் மூலம் அவருக்கு கிடைக்கும் பணத்தை வைத்து ஏழை மக்களுக்கு உதவுகிறார். பெண்களுக்கு ஃபிட்னஸ் ரொம்ப முக்கியம் என்று சொல்லும் நாயகன். சாப்பாடு ரொம்ப முக்கியம் என்று இருக்கும் நாயகி இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த சீரியலின் கதை. இது தொடர்பான ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Serial Update Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment