வளையல்களால் அலங்கரித்த மேடை… மனைவிக்கு ஸ்பெஷல் கிப்ட் : நவீன் – கண்மணி வளைகாப்பு போட்டோஸ்

செய்திவாசிப்பாளரான கண்மணி என்பரை திருமணம் செய்துகொண்ட நவீன், தற்போது மீண்டும் கலர்ஸ் தமிழின் கண்ட நாள் முதல் சீரியலில் நடித்து வந்தார்.

Naveen Kanmani
சீரியல் நடிகர் நவீன் – கண்மணி வளைகாப்பு

சின்னத்திரை தம்பதி நவீன் கண்மணி தம்பதியின் வளைகாப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாடே சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் நவீன். அதற்கு முன்பு தமிழில் பூலோகம் பட்டாஸ்’ மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தாலும், நவீனுக்கு அடையாளத்தை கொடுத்தது சீரியல் தான்.

இதயத்தை திருடாதே சீரியலுக்கும் நடிகர் நவீனுக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வந்த நிலையில். சமீபத்தில் இந்த தொடர் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து செய்திவாசிப்பாளரான கண்மணி என்பரை திருமணம் செய்துகொண்ட நவீன், தற்போது மீண்டும் கலர்ஸ் தமிழின் கண்ட நாள் முதல் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் நவீன் தனது நீண்டநாள் காதலியும் செய்தி வாசிப்பாளருமான கண்மணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இதனிடையே தற்போது கண்மணி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தற்போது 7 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், கண்மணிக்கு நவீன் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும் மேடையை வளையல் மூலமாகவே அலங்கரித்திருந்தனர். தனது மனைவிக்காக அதிகமான வளையல்கள் வாங்கி கொடுத்துள்ள நவீன் ஸ்பெஷலாக கேக் ஒன்றை கொடுத்துள்ளார்.

தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தம்பதி இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actor naveen kanmani baby shower function photos update

Exit mobile version