இளம் நடிகர் பவன் மாரடைப்பால் மரணம் : திரையுலகினர் அதிர்ச்சி

கர்நாடகாவின் மாண்டியாவில் பிறந்த நடிகர் பவன் தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நிலையில் மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

கர்நாடகாவின் மாண்டியாவில் பிறந்த நடிகர் பவன் தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த நிலையில் மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pawan

தொலைக்காட்சி நடிகர் பவன் மாரடைப்பால் மரணம்

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகர் பவன் (25) இன்று காலை மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

சமீபகாலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணம் அதிகரித்து வருகிறது. இதல் குறிப்பாக திரைத்துறையை சார்ந்தவர்கள் நட்சத்திரங்களின் திடீர் இழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திடீரென மரணமடைந்தது இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் சமீபத்தில் புனித் ராஜ்குமாரின் உறவினர் விஜயராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனா வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றபோது மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சோகத்தில் இருந்து திதிரையுலகம் தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கும் வேளையில், மற்றொரு நடிகரும் மாரடைப்பால் மரணமடைந்தது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டியாவில் பிறந்த நடிகர் பவன் மும்பையில் மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் என்றாலும், தனது பெற்றோருடன் மும்பையில் வசித்து வந்துள்ளார். அதே போல்  கன்னடத்தை விட இந்தி மற்றும் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடர்களில் அதிகம் நடித்து வந்ததால் மும்பையில் வசித்து வந்தார். வளர்ந்து வரும் நடிகர் பவனுக்கு 25 வயதுதான் ஆகியுள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் மரணமடைந்துள்ள நிகழ்வு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

சமீபத்தில் ஸ்பந்தனா மாரடைப்பால் மரணமடைந்த விவகாரம் இன்னும் விவாதமாகி வரும் நிலையில், மேலும் ஒரு நடிகர் உயிரிழந்ததால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: