/tamil-ie/media/media_files/uploads/2021/07/Prajin.jpg)
Anbudan Kushi Serial Actor Prajin Committed New Movie : 2006-ம் ஆண்டு வெளியான டிஷ்யூம் படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானவர் ப்ரஜின் பத்மநாபன். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ள நிலையில், தமிழில் மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து சின்னத்திரை சீரியலில் களமிறங்கிய ப்ரஜின் காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அன்புடன் குஷி சீரியலில் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ப்ரஜின் 3 வருட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். நினைவெல்லாம் நீயாடா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நாயகனாக நடிக்க உள்ளதாக தனது சமூகவலைதளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் பூஜை விழாவில் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் இந்த படத்திற் இளையராஜா இசையமைக்க உள்ளதாகவும், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' புகழ் மதுமிதாவும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.