Tamil Serial Actor Prajin Leave In Vaidhegi Kathirunthal Serial : கொரோனா தொற்று பாதிப்பு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துளளது. அதிலும் குறிப்பாக பெரிய திரை ரசிகர்கள் பெரும்பாலானோரை சின்னத்திரையின் தீவிர ரசிகர்களாக மாற்றியுள்ளது என்று சொல்லாம். இந்த ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்துகொள்ள டிவி சேனல்களும் நாள் தோறும் புதுப்புது நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகினறனர். இதில் ஒரு சில நிகழ்ச்சிகள் வந்த சுவடுதெரியாமல் மறைந்து போனாலும் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் மக்கள் மனதில் இடம்பிடித்து விடுகின்றன.
குறிப்பாக சீரியல் மட்டுமல்லாது சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் கூட வெள்ளித்திரை பிரபலங்களுக்கு இணையாக வரவேற்பை பெற்று வருகினறனர். அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சின்னத்தம்பியாக நீங்க இடம் பிடித்துள்ளவர் நடிகர் பிரஜின். கடந்த 2005-ம் ஆண்டு விஜய் டிவியின் இது ஒரு காதல்கதை என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர், டிஷ்யூம் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ச்து சா பூ த்ரி, தீக்குளிக்கும் பச்சை மரம், சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆண் தேவதை, ல்வ் ஆக்ஷன் ட்ரமா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரையிலும் நடித்து வந்த இவர், பெண், அஞ்சலி உள்ளிட்ட சன்டிவி தொடர்களிலும், காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி, அன்புடன் குஷி, உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். இதன் காரணமாக இவருக்கு சின்னத்திரையி்ல் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புக்காக காத்திருந்த பிரஜின், சின்னதிரையிலும் கவனம் செலுத்தி வந்தார். அந்த வகையில் இவர் நடித்த சின்னத்தம்பி, மற்றும் அன்புடன் குஷி சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலை பிரஜினுக்காகவே இந்த சீரியலை ரசிகர்கள் பார்த்து வந்தனர்
இந்நிலையில், தற்போது திடீரென பிரஜின் வைதேகி காத்திருந்தால் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எதிர்பார்த்த பட வாய்ப்பு வந்துகொண்டிருப்பதால், சினிமா மற்றும் சீரியல் என இரண்டிற்கும் கால்சீட் பிரச்சனை வருவதால், சீரியலில் இருந்து அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. பிரஜின் தற்போது நினைவெல்லாம் நீயா மற்றும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவரது விலகல் சீரியல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரஜின் கேரக்ரில் அடுத்து யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil