Serial Actor Prajin Lifestyle Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நடிகர்களில் ஒருவர் பிரஜின். ஆங்கராக தொடங்கி சின்னத்திரை வெள்ளித்திரை என பன்முக திறமைகளுடன் பயணித்துக்கொண்டிருக்கும் இவர், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
கேரளா மாநிலம் கோழிக்கூடு பகுதியை சேர்ந்த பிரஜின் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை திருவனந்தபுரத்தில் முடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே துறுதுறுவென இருந்து அவர் நடிப்பில் ஆர்வமான இருந்துள்ளார். இதற்கான முயற்சியாக சன்டிவி குறித்து பேப்பரில் வந்த விளம்பரத்தை பார்த்து சென்னைக்கு வந்துள்ளார். அங்கு இவருக்கான ஆடிஷனில் வெற்றி பெற்ற அவர் ஆங்கரான பணியில் சேர்ந்துள்ளார்.
சன்மியூசிக் தொடங்கிய புதிதில், முதல் ஆண் தொகுப்பாளர் என்று பெயர் பெற்ற இவர் அதற்கான விருதையும் வென்றுள்ளார். சன்டிவியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே விஜய்டிவியில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்து்ளளது. 2005-ல் ஒளிபரப்பான இது ஒரு காதல்கதை என்ற சீரியல் மூலம் சின்னத்தரையில் என்ட்ரி கொடுத்த பிரஜின், தொடர்ந்து சன்டிவியின் பெண் என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.
இதற்கிடையே தொகுப்பாளியான சான்ராவுடன் காதலில் விழுந்த அவர், அவரை திருமணமும் செய்துகொண்டார். தொடர்ந்து சீரியலில் நடித்த அவருக்கு ஜீவா நடித்த டிஷ்யூம் படத்தின் மூலம் வெள்ளித்திரை அறிமுகம் கிடைத்துள்ளது. அதன்பிறகு சா பூ த்ரி என்ற படத்தில் நடித்த பிரஜின், தி த்ரில்லர், டோரன்மெண்ட் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து தீக்குளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், சுற்றுலா உள்ளிட்ட படங்களில் சப்போர்ட்டிங் கேரக்ரில் நடித்து வந்த பிரஜின், மோகன் ஜி இயக்கத்தில் வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படம் பல தடைகளை தாண்டி வெளியானது. இதற்கிடையே சினத்திரையில். சரவணன் மீனாட்சி, சின்னத்தம்பி, அன்புடன் குஷி உள்ளிட் சீரியல்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
இதில் சின்னத்தம்பி சீரியல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வெள்ளித்திரையில் சின்னத்தம்பி பிரபு என்பதுபோல பெரிய சின்னத்திரையில் சின்னத்தம்பி பிரஜின் என்று அனைவரும் கூறி வருகினறனர். இந்தமகிழ்ச்சியுடன் சேர்ந்து பிரஜின் சாண்டரா தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்தது.
தற்போது சின்னத்திரையில் அன்புடன் குஷி சீரியலில் நடித்து வரும் பிரஜினுக்கு மீண்டும் வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி நினைவெல்லாம் நீயா மற்றும் சங்கரலிங்கத்தின் சைக்கிள் வண்டி என்ற இரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரின் மற்றொரு புதிய படம் சமீபத்தில் பூஜை போடப்பட்ட நிலையில், இந்த படத்தில் வனிதா விஜயகுமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்தாலும் சின்னத்தரையும் விடாத பிரஜின் தற்போ வைதேகி காத்திருந்தால் என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் இருவரும் தங்களது திறமை மற்றும் வாய்ப்புகளால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள நிலையில், அவர்களின் நெருங்கிய நண்பராக பிரஜின் ஒரு பெரிய வெற்றிக்காக தனது கடுமையான முயற்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil