நீ கோவமா பேசு, அப்போதான் வரும்; தங்கையுடன் சண்டைக்கு தயாரான சீரியல் நடிகை: கடைசில இப்படி ஆகிடுச்சே!

பல காமெடிகள் செய்து நம்மை சிரிக்க வைத்து தற்போது சீரியல்களில் நடித்துவரும் பிரியங்கா தனது தங்கையுடன் இண்டர்வியூவில் சண்டைப்போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பல காமெடிகள் செய்து நம்மை சிரிக்க வைத்து தற்போது சீரியல்களில் நடித்துவரும் பிரியங்கா தனது தங்கையுடன் இண்டர்வியூவில் சண்டைப்போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
serial actor

காதல் தேசம், வில்லன், மருதமலை படங்களில் நடித்த நடிகை பிரியங்கா தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கலாட்டாவிற்கு அளித்த பேட்டியின்போது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை பற்றி பார்ப்போம். பிரியங்கா, தமிழ் திரையுலகில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'காதல் தேசம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, அப்பாஸ், மற்றும் வினீத் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சியாமா என்ற கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு பரவலாக கவனிக்கப்பட்டது. இது அவரது திரை வாழ்க்கைக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. 

Advertisment

அதேபோல 2002 ஆம் ஆண்டு வெளியான அஜீத்குமாரின் வில்லன்  திரைப்படத்தில் "அள்ளி தந்த வானம்" பாடலில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். 2007 ஆம் ஆண்டு வெளியான மருதமலை  படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவைக் காட்சிகள் இவருக்குப் பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. அவரது இயல்பான நடிப்பு இந்தப் படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

அடுத்தடுத்து தலைநகரம், வேல்  போன்ற படங்களிலும் முக்கியமான துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவை தவிர, அவர் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலு மற்றும் விவேக் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.  

திரைப்படங்களைத் தவிர, பிரியங்கா சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இருப்பினும், அவரது முதன்மை அடையாளம் திரைப்பட நடிப்பே. பிரியங்கா தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிக வெளிப்படையாகப் பேசியுள்ளார். அவரது திருமண வாழ்க்கை சில சவால்களை சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இனி மறுமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றும் சமீபத்திய பேட்டிகளில் கூறியுள்ளார். தற்போது அவர் தனது வாழ்க்கையை தனது தங்கை, மகள் மற்றும் தாயுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் கலாட்டா பேட்டியில் தனது தங்கையுடன் சண்டையிட்டுக்கொள்வதுபோல ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்கை ஸ்வாதிகாவின் குழந்தை அடம்பிடித்துக்கொண்டு இருப்பது அதை மிரட்ட முயற்சிப்பதும் என அக்கா தங்கையின் உரையாடல் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. குழந்தையை திட்டாமல் பொறுமையாக சொன்னாலே கேட்கும் என்றும் திட்ட வேண்டாம் என்றும் தனது தங்கையிடம் பிரியங்கா கூறியுள்ளார். என்னதான் சீரியலில் நடித்தாலும் வீட்டில் தங்கையுடன் சண்டை போடும்போது தனது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே நகைச்சுவையாக சண்டை போட்டுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: