Serial Actor Raju Jayamohan Lifestyle : சீரியல் என்றாலே நம் நினைக்குவுக்கு வருவது ஒரு சில தொலைக்காட்சிகள் மட்டுமே.அதில் முக்கிய இடம் விஜய் டிவிக்கு உண்டு. ரியாலிட்டி ஷோ சீரியல் என் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை கொடுத்து வரும் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொலைக்காட்சியில் வரும் சீரியலில் நடித்துவிட்டால் போதும் உடனே சீனிமா வாய்ப்பு கிடைத்துவிடம் என்று அடித்து சொல்லும் அளவுக்கு விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் பலர் வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர்.
இநத வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளவர் ராஜூ ஜெயமோகன். விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கத்தி என்கிற கதிரேசன் ரோலில் தனது அசத்தலான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். இந்த சீரியலில் இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்கள் ரசிக்கும்படி இருக்கும. அதுமட்டுமல்லாமல் டைமிங்கில் இவர் பேசும் வசனம் பெரிய அளவில் ரீச் ஆகி வருகிறது. தற்போது இவர் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தாலும், தற்போதுவரை நாம்இருவர் நமக்கு இருவர் சீரியலில் இவரது கதாப்பாத்திரம் வந்துகொண்டுதான் இருக்கிறது.
விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. பல புதுமுகங்கள் பங்கேற்றுள்ள இந்நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான முகங்களில் ஒருவராக இருப்பவர் ராஜூ ஜெயமோகன். அதிலும் இந்நிகழ்ச்சியில் காமனாக நடந்துகொள்ளும் ராஜூ, ஒருவருக்கு லைக் போட்டாலும், டிஸ்லைக் போட்டாலும் அது ஏன் என்று விவரித்து சொல்லிவிட்டு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தென் தமிழகமான திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜூ பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் படித்து முடித்துவிட்டு சினிமா மீது இருந்த ஆர்வத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சென்னை வந்த அவர் பல கட்ட போராட்டத்திற்கு பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாக்கியராஜிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்திய அவருக்கு விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் தொடரின் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இந்த சீரியல் மூலம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, சரவணன் மீனாட்சி தொடரில் கவின் நண்பராக நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் கவினுடன் நெருக்கமான ராஜூ கவின் நடித்த முதல் படத்தில் ராஜூவையும் நடிக்க வைத்தார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், போதிய வரவேற்பு இல்லாத்தால் ராஜூ மீண்டும் சீரியல் பக்கம் வந்தபோது அவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது. இதில் வருண் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ராஜூ சீரியலில் திருப்புமுணையை ஏற்படுத்தும் காதாப்பாத்திரமாக இருந்தார்.
தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைரின் கவனத்தை ஈர்த்து வரும் ராஜூ, பல போராட்டங்களுக்கு பிறகே ராஜூ சின்னத்திரையில் பிரபலமாகியுள்ளார். சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருந்தாலும் தனது ஸ்கிரிப்ட் பணிகளில் கவனம் செலுத்திய ராஜூ விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல ஷோக்களின் ஸ்கிரிப் ரைட்டராக இருந்துள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் அவரின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil