Serial actor Sabari Lifestyle Update : விஜய் டிவி சீரியலில் நடித்தாலே அடுத்து வெள்ளித்திரையில் வாய்ப்பு பெற்று விடலாம் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த அளவிற்கு விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது. அவர்களின் சமூக வலைதள பக்கங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு சீரியலும் அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகி வருகின்றனர். இதில் நடிகர்கள் பலரும் சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றாலும், அதற்கு மாற்றம் தரும் வகையில் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு சீரியலில் களமிறங்கி புகழ் பெற்றுள்ளவர் சபரி. விஜய் டிவியின் ப்ரைம்டைமில் ஒளிபரப்பாகும் சீரியல் வேலைக்காரன்.
இந்த சீரியலில் வேலன் என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருபவர் சபரிநாதன். தொடக்கத்தில் இந்த சீரியல் ரஜினிகாந்தின் முத்து படத்தின் காப்பி என்று பரவலாக பேசப்பட்டது. ஆனாலும் கடந்த இந்த சீரியலில் விறுவிறுப்பாக திரைக்கதை அந்த சீரியல் தொடர்பான தவற தகவலை மாற்றியுள்ளது என்றே கூறலாம்.
டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில் சபரியின்நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவே இந்த சீரியலின் வெற்றிக்கு காரணம். சபரிநாதன் என்று பெயர்கொண்ட இவர், ஆர்ஜே, விஜே, மாடல், என பன்முக திறமையாளராக உள்ளார். நடிப்பின் மீதுள்ள மோகத்தினால் சினிமா வாய்ப்பு தேடிய இவர் ஷார்ட் ஃபிலிம்களில் நடித்துள்ளார். இதில் இவர் நடித்த மௌனம் பேசியதே ஷார்ட் ஃபிலிம் நல்ல ரீச் கொடுத்தது.
தொடர்ந்து விளம்பர மாடலாகவும் ஷார்ட்ஃபிலிம்களிலும் நடித்து வந்த இவர், தனுஷூடன் விஐபி 2, விஷாலுடன் துப்பறிவாளன், உதயநிதியுடள் சைக்கோ, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நட்பே துணை என பல படங்களில் துணை நடிகராகவும் நடித்தார். ஆனாலும் வெற்றிக்காக போராடிய அவருக்கு, அதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இதனிடையே சபரியின் நெருங்கிய நண்பரான விஜய் டிவியின் பிரபல இயக்குனர் பிரவீன் மூலம் பல சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதில் சரவணன் மீனாட்சி என் பொம்மக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட சீரியலில் நடிக்க இருந்த வாய்ப்பு பறிபோனது. தற்போது விஜய் டிவியின் ஹிட் சீரியலான ஜா ராணி 2-ல், சரவணனாக நடித்து சில காட்சிகள் எடுத்த பின்பு கடைசி நேரத்தில் சபரி சீரியலில் இருந்து நீக்கப்பட்டு, சித்து தேர்வானர். இப்படி ஏகப்பட்ட ஏமாற்றங்கள், அவமானங்களை சந்தித்துக் கொண்டிருந்த சபரிக்கு தற்போது வேலைக்காரன்சீரியல் வெற்றியை கொடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil