/indian-express-tamil/media/media_files/OEkfLk3x4uOblqCRdny8.jpg)
சீரியல் நடிகர் சல்மான்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலில் விரைவில் நடிகர் சல்மான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் டிவி சீரியல்கள் ஒளிபரப்புவதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு உண்டு. வெற்றி பெற்ற திரைப்படங்களில் பெயர்களை சீரியலுக்கு பயன்படுத்தும் முறையை தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்தியதே விஜய் டிவி என்று சொல்லலாம். அந்த வகையில், திரைப்படத்தின் பெயர் இல்லாமல் வெற்றி பெற்ற சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும்.
தீபக், நட்சத்ரா நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியல் பரபரப்பான திரைக்கதையுடன் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பிடித்துள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது புதிதாக நடிகர் சல்மான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பேசியுள்ள நடிகர் சல்மான், தீபக் தினகர், நட்சத்திரா நாகேஷ் ஆகியோருடன் இணைவதற்கு மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், சீரியல் இயக்குனர் குமரனுக்கு எனக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். சின்னத்திரையின் அன்பே வா சீரியல் மூலம் அறிமுகமான சல்மான அடுத்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்தார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சல்மான் தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்க உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தீபக், நட்சத்திரா நாகேஷ் தவிர, மீரா கிருஷ்ணன், நவீன், விஜே சங்கீதா, கே.பி.ஒய் யோகி ரேகா கிருஷ்ணப்பா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியலின் ப்ரமோவில் ராகினி விபத்தில் சிக்கிவிட தமிழ் அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். இதை பார்த்து வில்லனாக அர்ஜூன் மனம் மாறுவதாகவும், அவருக்கு அடுத்து வில்லன் வேடத்தில் சல்மான் அறிமுகமாவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.