Tamil Serial Update vanathaipola : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக வலம் வருபவர் சஞ்சீவ். மெட்டி ஒலி, திருமதி செல்வம், கண்மனி சித்தி 2 உள்ளிட்ட பல சன்டிவி சீரியல்களில்நடித்துள்ள இவர், ஒரு சில திரைப்படங்படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள இவர், தற்போது அருண்விஜயுடன் யாணை படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில வைல்டு கார்டு என்ட்ரியாக சஞ்சீவ் கலந்துகொண்டார். கடந்த அக்டோபர் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.. இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்த சஞ்சீவ்க்கு ரசகர்கள் மத்தியில் ஆதரவு பெருகிறது.
சிறப்பாக விளையாடி வந்த சஞ்சீவ் கடந்த வாரம் பிக்பாஸ் நகழ்ச்சயில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தனது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சஞ்சீவ் தனக்கு வந்த சன்டிவியின் மிகப்பெரிய சீரியல் வாய்பபை நிராகரத்துள்ளார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவியில் பல சீரியல்களில் ஒளிபரப்பானாலும். அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட ஒரே சீரியல் வானத்தைபோல. இதில் அண்ணன் சின்ராசுவாக நடிகர் தமன் மற்றும் தங்கை துளசியாக ஸ்வேதா நடித்து வந்தனர். ஆனால் சில தவிர்க்கமுடியாக காரணத்தால் ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவருக்கு பதிலாக மான்யா ஆனந்த துளிசியாக நடித்து வருகிறார்.
தொடர்ந்து ஸ்வேதாக வெளியேறிய சில எபிசோடுகளில் நடிகர் தமனும் சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் சின்ராசுவாக அடுத்து யார் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்ட்ட நிலையில், சின்ராசுவாக நடிகர் சஞ்சீவ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நேரத்தில் பிக்பாஸ் வாய்ப்பு கதவை தட்டியதால், வானத்தைபோல வாய்ப்பை நிராகரித்துள்ளார் சஞ்சீவ்.
இதனால் தற்போது அவருக்கு பதிலாக ஜீதமிழின் யாரடி நீ மோகினி சீரியலின் நாயகன் ஸ்ரீகுமார் சின்ராசுவாக நடித்து வருகிறார். டிஆர்பி ரே்டிங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் வானத்தைபோல சீரியல் வாய்ப்பை சஞ்சீவ் நிராகரித்து உண்மையிலேயே அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதில் மற்றொரு தகவல் என்ன வென்றால், ஸ்ரீகுமார் பிரபலமான ஜீ தமிழின் யாரடி நீ மோகினி சீரியலில் முதலில் நடித்தது சஞ்சீவ் தான். அதன்பிறகு அவர் விலகியதால், இந்த வாய்ப்பு ஸ்ரீகுமாருக்கு வழங்கப்பட்டு சீரியலும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil