/tamil-ie/media/media_files/uploads/2021/07/Sanjeev.jpg)
Raja Rani Serial Actor Sanjeev New Serial In Sun Tv : சீரியல் ரசிகர்களை எதிர்பாப்புக்கு உள்ளாக்குவதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு உண்டு.இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், புதிய சீரியல்களும் அவ்வப்போது களமிறங்கி வருகின்றன. ஆனாலும் பழைய சீரியல்களுக்கும் மவுசு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சில சீரியல்களில் உள்ளன.
இதில் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கு இருவர், ஆயுத எழுத்து, மௌன ராகம் ஆகிய சீரியல்கள் சினிமா டைட்டிலுடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் ராஜா ராணி சீரியல் முலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் சஞ்சீவ். இந்த சீரியல் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெறற அவர், அடுத்து காற்றின் மொழி என்ற சினிமா டைட்டிலுடன் வெளியான சீரியலில் நடித்தார். அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் கிராமத்து சூழலில் நாயகி பிரியங்கா ஜெயினுடன் ஏற்படும் காதலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. .300 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் தற்போது முடிவடைந்துள்ளது.
அதன்பிறகு எந்த சீரியலிலும் நடிக்காத சஞ்சீவ், கடந்த சில தினங்களுக்கு விரைவில் என் அடுத்த சீரியல் பற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன் என்று முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி, நான் எங்கும் செல்லவில்லை கூறி இருந்தார். விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். தொடர்ந்து டந்த வாரம் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்ட சஞ்சீவ், 7.30 PM பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.
விஷன் டைம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த சீரியலுக்கு ‘கயல்’ என்ற சினிமா பட டைட்டிலையே வைத்துள்ளனர். தற்போது இந்த சீரியலின், படப்பிடிப்பு பூஜை துவங்கி இருக்கிறது. அந்த புகைப்படத்தை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சஞ்சீவ் நடித்த ராஜா ராணி , காற்றின் மொழி ஆகிய இரண்டு சீரியல் டைட்டிலும் சினிமா பட டைட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.