New Update
/indian-express-tamil/media/media_files/N9bJre6sjHyeuTCY5YUn.jpg)
பாக்கியலட்சுமி சீரியல் கோபி
தனது காமெடி வில்லத்தனத்தின் மூலம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார் நடிகர் சதீஷ்.
பாக்கியலட்சுமி சீரியல் கோபி
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து பிரபலமான நடிகர் சதீஷ், தனக்கு சூனியம் வந்துள்ளதாக ஒரு பெண் தன்னை மிரட்டி வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சதீஷ். அவரது காமெடி கலந்த வில்லத்தனத்திற்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவரது நடிப்பை பார்த்து ஒரு சிலர் அவரை மிகவும் தரக்குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகின்றனர்.
அதே சமயம், தனது காமெடி வில்லத்தனத்தின் மூலம் தனக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார். சமூகவலை தளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகர் சதீஷ் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே தனக்கு சூனியம் வைத்துள்ளதாக கூறி ஒரு பெண் தன்னை மிரட்டி வருவதாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து திருவான்மயூர் காவல்நிலையத்தில் சதீஷ் அளித்துள்ள புகாரில், கடந்த ஆண்டு கலாச்சேத்ரா காலனியில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றிருந்தபோது, ஒரு பெண் என்னுடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நான் அப்போது மறுத்துவிட்டேன். அதன்பிறகு சில நாட்கள் கழித்து அந்த பெண் என்னை தொலைபேசியில் அழைத்து, செல்பி எடுக்க வேண்டும் என்று கூறி அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்தார்.
அவரின் தொந்தரவு காரணமாக நான் அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டேன்.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அடையாரில் உள்ள எனது வீட்டுக்கு வந்த அந்த பெண், குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வீட்டில் வைத்துவிட்டு செய்வினை செய்துவிடுவேன் என்று, மிரட்டினார். இது குறித்து, அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.