New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/06/GOPI.jpg)
Actor Sathish MGR Getup : பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் எம்ஜிஆர் வேடத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Serial Actor Sathish MGR Getup : பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து நடித்து வரும் நடிகர் சதீஷ், எம்ஜிஆர் வேடமிட்டு நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப்ப தலைவியின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இதில் பாக்கியலட்சுமி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவர் கோபியாக சதீசும் நடித்து வருகிறார். இதில் தனது முன்னாள் காதலியோடு தொடர்பில் இருப்பது போல தான் காண்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் தனது குடும்பத்தில் மாட்டிக்கொள்வாரா அல்லது தப்பிப்பாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர்கள் பற்றி தினந்தோறும் பல வகையான தகவல்கள் வெளியாகி வருகிறது.அந்த வகையில் தற்போது நடிகர் சதிஷ் குறித்து ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆர் போன்று வேடமிட்டு ஒரு படத்தில் நடித்துள்ளார் சதீஷ். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த கதாப்பாத்திரம் எந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.
மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் இவரின் கதாப்பாத்திரத்திற்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.