Advertisment

கிண்டல்... கேலி... அவமானம்... விடா முயற்சி... விஜே அக்னியின் வெற்றிக்கதை

Tamil Serial Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெற்றிநடைபோட்டு வரும் சீரியல் செம்பருத்தி

author-image
WebDesk
New Update
கிண்டல்... கேலி... அவமானம்... விடா முயற்சி... விஜே அக்னியின் வெற்றிக்கதை

Tamil Serial Actor VJ Akni Lifestyle : சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்துவதிலும், சில சமயங்களில் அவர்களின் பொறுமையை சோதிப்பதிலும் சீரியலுக்கு நிகர் எதுவும் இல்லை என்று கூறலாம். அந்த அளவி்ற்கு சின்னத்திரை சீரியல் பல குடும்பங்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு வெற்றிநடைபோட்டு வரும் சீரியல் செம்பருத்தி. ஜீ தமிழில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Advertisment

இந்த சீரியல் வெற்றிக்கு முக்கிய காரணம் இதில் முதன்மை கதாப்பாத்திரங்களான ஆதி – பார்வதி தான். சின்னத்திரையில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர்களுக்கு இடையில் நடைபெறும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே இளைஞர்கள் பலர் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் செம்பருத்தி முன்னணியில் இருந்து வருகிறது. நட்சததிர ஜோடியான ஆதி பார்வதி இருவரும் திருமணம் செய்துகொணட எபிசோடுகள் டிஆர்பியில் தொடர்ந்து சாதனை தொடராக பயணித்தது.

ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதில் ஆதியாக நடித்த கார்த்திக் ராஜ் திடீரென சீரியலில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், ஆதியாக அடுத்து நடிக்க வரும் நடிகர் கார்த்திக் ராஜ்ஜின் இடத்தை பூர்த்தி செய்வாரா என்று பெரும் எதிர்பார்பும் எழுந்தது. ஆஃபீஸ் சீரியல் மூலம் புகழ்பெற்ற கார்த்திக், செம்பருத்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் முக்கிய நாயகனாக வலம வந்தார். ஆனால் திடீரென அவர் சீரியலில். இருந்து நீக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.

ஆனாலும் அடுத்த ஆதி யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தபோது விஜே அக்னி நட்சத்திரம் புதிய ஆதியாக அறிமுகம் ஆனார். பிரபல யூடியூப் சேனலில் முதன்மை விஜேவாக இருந்த அக்னி பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். அதில் இருக்கும்போது ஏராளமான ரசிகர்கள் ட்டாளத்தை பெற்றிருந்த அக்னி தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் பிரபாஸ், அல்லு அர்ஜூன், ராம் சரண், என பல நட்சத்திரங்களை  பேட்டி எடுத்துள்ளார். விஜே ஆங்கரிங்கில் தனக்கென தனி அடையாளத்தை பெற்ற இவருக்கு செம்பருத்தி சீரியல் வாய்ப்பு கிடைத்தது.

முதலில் தயக்கத்துடன் ஒப்புக்கொண்ட அக்னி, தொடக்கத்தில் ஆதியாக நடிப்பது குறித்து பல நெகடிவ் கருத்துக்களை எதிர்கொண்டுள்ளார். கார்த்திக் ராஜை ஆதியாக பார்த்து ரசித்த ரசிகர்கள் அக்னியை அவ்வளது எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் தன்னை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் நெகடிவ் கருத்துக்களால், மனமுடைந்த அக்னி ஆரம்பத்தில் நடிக்கவே மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். ஆனால் நண்பர்கள் மற்றும் செம்பருத்தி குழு அவருக்கு ஆதரவாக நின்றுள்ளனர். தற்போது அக்னியின் நடிப்பு செம்பருத்தி சீரியலில் முன்னாள் ஆதியை மறக்கடிக்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

தனது உழைப்பால் ஆக்‌ஷன் காட்சிகளிலும் அக்னி ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் நீக்கப்படுவதற்கு1 வாரத்துக்கு முன்பு தான் அக்னி அவரை பேட்டி எடுத்திருந்தார். அந்த பேட்டி ஒளிப்பரப்பாகி 1 வாரத்தில் புது ஆதியாக அதே செம்பருத்தி சீரியலில் அக்னி அறிமுகம் ஆனார். இதை அவரே எதிர்பார்க்கவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment