/indian-express-tamil/media/media_files/mtjEtLvR6NPNLkHep9cn.jpg)
வானத்தைப்போல சீரியல்
சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் நடித்து வரும் நடிகரு ஸ்ரீகுமார் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட இந்த சீரியலில், அண்ணன் சின்ராசு கேரக்டரில் நடிகரு ஸ்ரீகுமார் கணேஷ் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான மற்றும் மாடலிங் துறைகளில் பன்முகத் திறனுக்காகப் புகழ் பெற்ற ஸ்ரீகுமார் கணேஷ், ஒரு காட்சி ரியாலிட்டிக்காக ரிஸ்க் எடுக்கவும் தயங்குவதில்லை என்பதற்கு சான்றாக பல பதிவுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
ஆன்-ஸ்கிரீன் ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக செயல்படும் ஸ்ரீகுமார் ஏற்கனவே ஒருமுறை நெருப்புடன் சண்டைக்காட்டி படமாக்கப்பட்டபோது ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அந்த காட்சி படமாக்கும்போது அவரது உடலில் தீப்பற்றிய அந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சின்ராசு மற்றும் அவரது மனைவி பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது விபத்து ஏற்படுவது போன்ற காட்சி.
இந்த காட்சி படமாக்கப்படும்போது பைக்கில் இருந்து விழுவதற்கு அமைக்கப்பட்டுள்ள பெட்டில் விழாமல் தள்ளிப்போய் அருகில் இருந்தவரின் மீது விழுந்துவிட்டார். அதன்பிறகு படக்குழு அனைவரும் ஜாலியாக பேசிக்கொள்வது போன்று இந்த வீடியோ அமைந்துள்ளது.
'வானத்தை போல' சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளில் இந்த காட்சி ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலையில், நடிகர்கள் மற்றும் குழுவினரின் அர்ப்பணிப்பு முயற்சிகள், இந்த வீடியோ பதிவுக்கு ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.