Advertisment
Presenting Partner
Desktop GIF

பிறந்த நாளில் மகனுடன் சீரியல் பிரபலம் : இவருக்கு இவ்வளவு பெரிய மகனா? குவியும் வாழ்த்துக்கள்

ரோஜா சீரியல் மூலம் இவரின் ஒரிஜினில் பெயர் மறந்து, அர்ஜூன் என்றே அழைக்க தொடங்கியதே அவருக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று சொல்லலாம்.

author-image
WebDesk
New Update
Sibbu Suryan

ரோஜா சீரியல் நடிகர் சுப்பு சூரியன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் சுப்பு சூரியன் தனது மகனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று அனைவரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

Advertisment

சன்டிவியின் ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சுப்பு சூரியன். அதற்கு முன்பே 2016-ம் ஆண்டு, கன்னடத்தில் வெளியான மிளனா என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது ரோஜா சீரியல் தான். இந்த சீரியலிலி் அர்ஜூன் என்ற வழக்கறிஞர் கேரக்டரில் சிறப்பாக நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார்.

மேலும் ரோஜா சீரியல் மூலம் இவரின் ஒரிஜினில் பெயர் மறந்து, அர்ஜூன் என்றே அழைக்க தொடங்கியதே அவருக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று சொல்லலாம். கடந்த 2022-ம் ஆண்டு ரோஜா சீரியல் முடிவடைந்த நிலையில், அடுத்து விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியலுக்கு போதிய வரவேற்பு இல்லாத நிலையில், அடுத்த சில மாதங்களில் அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது.

இதனால் சுப்பு சூரியன் அடுத்து எந்த சீரியலில் நடிக்க போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஜீ தமிழின் புதிய சீரியலில் சுப்பு சூரியன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, ஷைய்ன் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுப்பு சூரியனுக்கு, ஷயான் என்ற உரு மகன் இருக்கிறார். தனது மகன் பிறந்த நாளான இன்று சுப்பு சூரியன் தனது மகனுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவில், ‘’உங்களைப் போன்ற ஒரு மகனுக்கு நான் என்ன செய்தேன் என்று சில நேரங்களில் நான் ஆச்சரியப்படுகிறேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில், கடவுள் என் வாழ்க்கையை ஆசீர்வதித்ததற்காகவும், உன்னை எனக்குக் கொடுத்ததன் மூலம் அர்த்தத்தைத் தந்ததற்காகவும் நான் நன்றி கூறுகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பு மகனே. ஐ லவ் யூ’’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரோஜா நடிகர் சுப்பு சூரியனுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று ஆச்சரியத்துடன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Sibbu Suryan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment