சின்னத்திரை ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான இதில் கோமதி பிரியா, வெற்றி வசந்த், இயக்குனரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். குடும்பத்தில் 3 மகன்கள். அதில் 2-வது மகனை பிடிக்காத அம்மா அவனுக்கு எவ்வித பாசத்தையும் கொடுக்காமல் மற்ற இரண்டு பிள்ளைகயையும் பார்த்து வருகிறார்.
அம்மாவின் செயலால் விரக்தியான 2-வது மகன், தனது அப்பா மீது அதிக பாசம் வைத்திருக்கிறான். இப்படி இருக்கும் குடும்பத்தில் மூத்த மகனுக்கு பொய் சொல்லி ஒரு மனைவி வருகிறாள். கடைசிமகன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள, மூத்த மகனுக்கு பார்த்த பெண்னை 2-வது மகன் திருமணம் செய்துகொள்கிறான். இவர்கள் மூவரின் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த சீரியலின் கதை.
இதில் முத்து – மீனா கேரக்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த சீரியல் டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. இதில் குடும்பத்தின் மூத்த மகன் மனோஜ் கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ரீதேவா. பல டிகிரிகள் முடித்துள்ள இவர், ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்ந்துள்ள நிலையில், இவரின் மனைவியும் தற்போது பொய் சொல்ல இவரை திருமணம் செய்துகொண்டார்.
ஒவ்வொருமுறை இவர் வேலை தேடி செல்லும்போதும் இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதனிடையே தற்போது இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திவ்யா துரைசாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள திவ்யா துரைசாமி சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“