பிரபல இயக்குனரின் அண்ணன் மகன்… சின்னத்திரையில் சீனியர் நடிகர்… பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி லைப்

Tamil Serial News : பாரதி ராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் ஸ்டாலின் முத்து

Pandian Stores Serial Actor Stalin Muthu Life Story : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல், பாண்டியன ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளும் மக்கள மத்தியில் பெரும் பிரபலம். அந்த வகையில் இந்த சீரியலில் மூத்த அண்ணன் மூர்த்தியாக நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் ஸ்டாலின் முத்து. வெளியில் இவரது உண்மையான பெயரை விட மூர்த்தி என்ற சீரியல் பெயரே பெரும் பிரபலம்.

திறமை இருந்தால் போதும் எதையும் வென்று விடலாம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். கடந்த 12 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வரும் இவர், தற்போது சீரியர் சின்னத்திரை நடிகராக வலம் வருகிறார். அதிலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டமான தேனி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டாலின் முத்து தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பாரதி ராஜாவின் அண்ணன் மகன் என்பது பலரும் அரியாத உண்மை. இவரது தந்தை பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். ஆனால் தனது சித்தப்பா வழியில் சினிமாவிற்கு வந்துவிட்ட ஸ்டாலின், பாரதி ராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்கு முன்பு ஆண்டாள் அழைகர், கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த ஸ்டாலின், தொடர்ந்து சன் டிவியின் பாச மலர், விஜய் டிவியில் சரவணன், மீனாட்சி,  மாப்பிள்ளை, உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ஸ்டாலின், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இந்த சீரியலில் நடித்ததற்காக விஜய் டிவி அவார்டையும் பெற்றுள்ளார் ஸ்டாலின்.

சீரியல் மட்டுமல்லாது செங்காத்து பூமியிலே, கொம்பன் மற்றும் கொடிவீரன் ஆகிய படங்களில் ஸ்டாலின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி தற்போது 2 மகன்கள் உள்ளனர். சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருடன் நடித்த விஜே சித்ரா இறந்த போது ஸ்டாலின் கதறி அழுத காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைத்தது.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருடன் தனம் ரோலில் நடிக்கும் சுஜிதா, ஸ்டாலின் ஒரு மிகச் சிறந்த மனிதர் பெண்களை மதிப்பவர் என்று குறிப்பிட்டிருந்தார். 12 ஆண்டுகளாக நடித்து வரும் ஸ்டாலின், இதுவரை நெகடீவ் விமர்சனங்களோ அல்லது சர்ச்சைகளிலோ சிக்காமல் தனக்கும் சினிமாவில் உள்ள தனது சித்தப்பா பாரதி ராஜாவுக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actor stalinmuthu life story in tamil

Next Story
எனக்கு வேற வழி தெரியல மக்களே… பாய் ஃபிரண்டை வித்தியாசமாக அறிவித்த சீரியல் நடிகை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express